அமாவாசை திதி இன்றா நாளையா எனச் சந்தேகமா?

இன்று மஹாளய பக்ஷ அமாவாசை. அமாவாசை திதி இன்றா? நாளையா? தர்ப்பணம் இன்று கொடுக்க வேண்டுமா..
அமாவாசை திதி இன்றா நாளையா எனச் சந்தேகமா?

இன்று மஹாளய பக்ஷ அமாவாசை. அமாவாசை திதி இன்றா? நாளையா? தர்ப்பணம் இன்று கொடுக்க வேண்டுமா.. இல்லை நாளை கொடுக்க வேண்டுமா? குழப்பத்தில் உள்ளவர்களுக்கு தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து சொல்லி இருக்கிறார். 

சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மகாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மகாளய அமாவாசையின் தனி சிறப்பாகத் திகழ்கிறது.

கடவுள் இருக்கிறாரா என்பது விவாதத்திற்குரிய விஷயம். ஆனால் நமது முன்னோர்கள் இருந்தது உண்மைதானே?

புரட்டாசி மாசம் என்பது பூமியினுடைய நீள் வட்ட பாதையில் பூமி - சூரியனுக்கு மிக அருகில் செல்லும் காலமே புரட்டாசி ஆகும். இந்தக் காலகட்டத்தில் நமது முன்னோர்களை வழிபடுவது கட்டாயமாகும்.

இன்று - 19.09.2017 - செவ்வாய்க்கிழமை - முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வதன் மூலம் நமது குறைகளை நிவர்த்தி செய்ய முடியும்.

குறிப்பு:
அமாவாசை திதியானது இன்றா நாளையா எனப் பெரிய குழப்பம் நிலவி வருகிறது.

சைவம் சார்ந்த மரபினுருக்கு இன்றும்(19.09.2017) - வைணவம் சார்ந்த மரபினருக்கு நாளையும்(20.09.2017) அமாவாசையாகும்.

எந்தக் கடமைகள் இருந்தாலும் முதலில் இன்று முன்னோர்களுக்கு முடித்து விட்டு பின் செய்வது சிறந்தது.

தந்தையார் இல்லாதவர்கள் கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். 

தந்தையார் இருப்பவர்கள் இன்று காலை முன்னோர்களை நினைத்து வணங்குவது நன்மை தரும். வீட்டில் யாரேனும் இறந்திருந்தாலும் கட்டாயம் இன்றைய தினம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com