பருவதராஜ குல மகாஜன அமைப்பினர் பழனியில் பாரம்பரிய வழிபாடு: 15 டன் பஞ்சாமிருதம் தயாரிப்பு

தைப்பூச விழாவை முன்னிட்டு எடப்பாடி பருவதராஜ குல மகாஜன அமைப்பினர் நேற்று மலைக்கோயிலில் தங்கி வழிபாடு செய்தனர். 
பருவதராஜ குல மகாஜன அமைப்பினர் பழனியில் பாரம்பரிய வழிபாடு: 15 டன் பஞ்சாமிருதம் தயாரிப்பு

தைப்பூச விழாவை முன்னிட்டு எடப்பாடி பருவதராஜ குல மகாஜன அமைப்பினர் நேற்று மலைக்கோயிலில் தங்கி வழிபாடு செய்தனர். 

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பருவதராஜகுல சமுதாயத்தினர் 350 ஆண்டுகளுக்கும் மேலாக பழனி முருகன் கோயிலுக்கு வருகைபுரிந்து வருகின்றனர். அந்தவகையில், இந்தாண்டு தைப்பூச விழா வழிப்பாட்டுக்காக ஜனவரி 31 பல்வேறு காவடிகளை சுமந்து நேற்று பழநிக்கு வந்து சேர்ந்தனர். 

காவடிகள் சுமந்து வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் 10 டன் மலை வாழைப்பழம், 3 டன் பேரீச்சை, 15 மூட்டை கற்கண்டு, 10 டன் சர்க்கரை மூட்டைகள், 12 டின்களில் தேன், நெய் மற்றும் 10 கிலோ ஏலக்காய் ஆகியவற்றைக் கொண்டு 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை முருகனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்க உள்ளனர். 

மலைக்கோயிலில் இன்று இரவு சாயரட்சை கட்டளை பூஜைகள் நடைபெற்று சுவாமி தரிசனம் செய்யும் இவர்கள் குடும்பத்துடன் மலைக்கோயிலில் தங்கி வழிபடுகிறன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com