விநாயகரின் பூரண அருள் கிடைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

இறை வழிபாடுகளிலேயே மிகவும் எளிமையான வழிபாடு விநாயகர் வழிபாடு. விநாயகரை எந்தப் பொருட்களிலும் உருவகம் செய்து வைத்து வழிபாடு செய்யலாம். 
விநாயகரின் பூரண அருள் கிடைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

இறை வழிபாடுகளிலேயே மிகவும் எளிமையான வழிபாடு விநாயகர் வழிபாடு. விநாயகரை எந்தப் பொருட்களிலும் உருவகம் செய்து வைத்து வழிபாடு செய்யலாம். 

மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால் விநாயகரை மண், பசுஞ்சாணம், மஞ்சள், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி, முத்து, பவளம், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம் போன்றவற்றில் கூட செய்து வழிபட முடியும். எந்த ஒரு பொருளிலும் விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம் என்பதால்தான், பிடித்து வைத்தால் பிள்ளையார் என்ற சொல் வழக்கு ஏற்பட்டது.

தெய்வங்களுக்கு எல்லாம் முதன்மையாக வணங்கப்படுபவர் விநாயகர். அதனால்தான் அவரை முழுமுதல் கடவுள் என்கிறோம். தடைகளை விலக்கி நாம் தொடங்கும் அனைத்து செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி. இவரின் நாமத்தை நாம் நவின்று வந்தால் விநாயக பெருமானின் பூரண அருள் நமக்குப் பரிபூரணமாக கிடைக்கும். 

விநாயகர் சகஸ்ரநாமம்

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்

ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே


விநாயகர் ஸ்லோகம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத்.


ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.


மூஷிக வாகன மோதக ஹஸ்த

சாமர கர்ண விளம்பித சூத்ர

வாமன ரூப மஹேஸ்வர புத்ர

விக்ன விநாயக பாத நமஸ்தே.


அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல

குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்

கணபதியைக் கைதொழுதக் கால்.


விநாயகர் காயத்ரி மந்திரம்

வக்ரதுண்டாய ஹீம்

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித

மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா

ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com