கே.சி.எஸ் ஐயரின் இந்த வார பலன்கள் (ஜனவரி 12 - 18)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜனவரி 12 - ஜனவரி 18) ராசி பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 
கே.சி.எஸ் ஐயரின் இந்த வார பலன்கள் (ஜனவரி 12 - 18)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜனவரி 12 - ஜனவரி 18) ராசி பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படும். தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்கள் உதவி செய்வார்கள். குடும்பத்தில் மந்தமாக நடந்து வந்த காரியங்கள் சுறுசுறுப்பாக நடக்கும். அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.
உத்தியோகஸ்தர்கள் சிறப்பாகப் பணிபுரிவீர்கள். மேலதிகாரிகளால் சில சஞ்சலங்கள் உண்டானாலும் தைரியத்துடன் எதையும் சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு இந்த வாரம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபம் அதிகரிக்கும். எனவே புதிய முதலீடுகளைச் செய்யலாம். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். மகசூல் அதிகரிக்கும். கால்நடைகளால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தொண்டர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு புகழும் அங்கீகாரமும் கிடைக்கும். சக கலைஞர்களே உங்களுக்கு உதவுவார்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். மருத்துவச் செலவுகள் குறையும். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 15,16. 

சந்திராஷ்டமம்: 12,13,14.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் திறமைகள் பளிச்சிடும். பணவரவு சிறப்பாக இருக்கும். முக்கிய பிரமுகர்களின் தொடர்பு உங்களின் செயல்களுக்கு உந்துசக்தியாக அமையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் அனைத்தும் மறையும். மேலதிகாரிகளிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் நன்கு யோசித்த பிறகே புதிய முதலீடுகளைச் செய்யவும். நண்பர்களை அதிகமாக நம்ப வேண்டாம்.விவசாயிகளுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். விளைச்சலும் நன்றாகவே இருக்கும். 

அரசியல்வாதிகள் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி கட்சிப் பணிகளைச் செய்வீர்கள். உங்கள் மீது கட்சி மேலிடம் கவனம் செலுத்தும். கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் உங்களைத் தேடிவரும். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சொல்லிக் கொள்ளும்படியாக இருக்காது. மாணவமணிகளுக்கு பெற்றோர்களின் ஆதரவும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும்.

பரிகாரம்: அம்பாள் தரிசனம் உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 13,14. 

சந்திராஷ்டமம்: 15,16.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தடைகள் விலகும். யோக பாக்கியங்கள் அதிகரிக்கும். வருமானம் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் வகையில் இருந்த தடைகள் விலகும். வீட்டுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியடைவீர்கள். கூட்டாளிகள், நண்பர்களிடமும் எச்சரிக்கையுடன் இருக்கவும். விவசாயிகள் புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவீர்கள். சுப காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். 

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் ஒருமித்த மனதுடன் பணியாற்றவும். திறமைகளை வளர்த்துக் கொள்ளவும். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மாணவமணிகள் படிப்பில் சற்று பின் தங்கிய நிலையில் இருப்பார்கள். எனவே உங்கள் விருப்பப் பாடத்தை நன்றாகப் படித்து முன்னேறுங்கள்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 12,13. 

சந்திராஷ்டமம்: 17,18.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

கவலைகள் நீங்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். திட்டமிட்ட வேலைகளைத் திறமையுடன் முடிப்பீர்கள். தீயோர் நட்பினால் பணவிரயம், கௌரவக்குறைச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை கவனத்துடன் செயல்படுவீர்கள். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகை நல்ல முறையிலேயே இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். விவசாயிகள் நல்ல வருமானத்தால் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். கால்நடைகளால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். புதிய பதவிகளைக் கொடுத்து கட்சி மேலிடம் உங்களை கௌரவப்படுத்தும். கலைத்துறையினருக்கு புகழும் நற்பெயரும் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். 

மாணவமணிகள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்தினால் அதிக மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 13,15. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

நடக்காது என்று நினைத்திருந்த காரியம் திடீரென்று நடந்து உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிடும். வழக்குகள் சாதகமான தீர்ப்பினை நோக்கிச் செல்லும். மனதிற்குப்பிடித்த செய்திகள் வந்து சேரும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலைமை சீராகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் உழைப்பிற்கேற்ற பணம் கிடைக்கும். கடமைகளைச் சரியாகச் செய்து வந்தால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். வியாபாரிகளுக்கு முயற்சியின் அளவுக்கேற்பவே லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் இறங்க வேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சலின் அளவு குறையும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். 

அரசியல்வாதிகள் தொண்டர்களின் பாராமுகத்தால் கோபப்படாமல் செயலாற்றவும். கட்சி மேலிடத்திடம் கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்து முடித்தாலும் பணவரவு தாமதமாகும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சாதகமான நிலை தென்படும். உங்களின் பக்குவமான பேச்சினால் அனைவரையும் கவருவீர்கள். மாணவமணிகள் படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 14,16.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

செலவுகளுக்கேற்ற வரவுகளைப் பெறுவீர்கள். உற்றார் உறவினர்கள் நட்புடன் நடந்து கொள்வார்கள். அந்நியர்களின் விரோதமும் நீங்கும். எதிர்காலத்தைப் பற்றிய 
நம்பிக்கை துளிர்விடும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரத்தொடங்கும். 

உத்தியோகஸ்தர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை குறித்த காலத்திற்குள் செய்து முடித்து விடுவீர்கள். உழைப்புக்குத் தகுந்த ஊதியமும் கிடைக்கும். வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். இருப்பினும் வரவு செலவுகளை கவனத்துடன் செய்யவும். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி நன்றாக இருக்கும். சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு பொருள்களை விற்பனைச் செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர நினைக்க வேண்டாம். தற்போதைய நிலையில் நல்ல பெயரெடுக்க முயற்சி செய்யவும். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். ஒப்பந்தங்களை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். உங்களின் அந்தஸ்து உயரும். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: அனுமனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 13,16. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் செயல்களை நன்கு திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். தேக ஆரோக்கியம் சீராகவே அமையும். 

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாக அமையும். புதிய யுக்திகளால் எதிர்பார்த்ததை விட கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தியும், விளைச்சலும் நன்றாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

அரசியல்வாதிகள் எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படவும். புதிய உற்சாகத்தைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் நிதானத்துடன் நடந்து கொண்டால் வெற்றியடையலாம். சக 
கலைஞர்களிடம் நட்புடன் இருப்பது நல்லது. பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ளவும்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 12,17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

ஆற்றல் அதிகரிக்கும். உங்கள் செயல்கள் திட்டமிட்டது போல் நடந்தேறும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைவந்து சேரும். சில விஷயங்களில் இடையூறுகளும் குழப்பங்களும் ஏற்பட்டாலும் இறுதியில் முடிவு சாதகமாகவே அமையும். 

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். வருமானம் சீராகவே இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாகவே முடியும். ஆனாலும் கவனத்துடன் இருக்கவும். விவசாயிகளுக்கு மகசூலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதிய குத்தகைகளிலும் இறங்கலாம். 

அரசியல்வாதிகளுக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையாது. தொண்டர்களும் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குறையும். ரசிகர்களின் ஆதரவு இருக்கும். 

பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு நடந்து கொள்வீர்கள். பேசும் நேரத்தில் நிதானம் தேவை. மாணவமணிகள் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கடுமையாக முயற்சி செய்தால் எந்தத் தடைகளையும் உடைத்து வெற்றிவாகை சூடலாம்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 15,17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

வேலைத்தொந்தரவுகள் இருந்தாலும் அவற்றை செவ்வனே செய்து முடித்துவிடுவீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மறைமுக எதிரிகளின் பலம் குறையும். பெயரும் புகழும் படிப்படியாக வளரும். ஆன்மிக பலம் அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்வரும் இடையூறுகளை மிகச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஆகவே துணிந்து முதலீடுகளைச் செய்யலாம். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். ஆகையால் புதிய முயற்சிகளில் தைரியமாக ஈடுபடலாம்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு அதிகரிக்கும். கட்சிப் பதவிக்குப் போட்டியிட்டு ஜெயிப்பீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும். 

பெண்மணிகள் பொருளாதார வளத்தால் திருப்தியடைவீர்கள். பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சியடைவீர்கள், குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டவும். பாடங்களை போதிய பயிற்சியுடன் படித்து முடிக்கவும். 

பரிகாரம்: சூரியபகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 15,18. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய) 

ர்ம சிந்தனை மேலோங்கும். உங்களின் வேலைகளைப் பக்குவமாக செய்து முடிப்பீர்கள், சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் பலப்படும். பயணங்களால் நன்மை உண்டாகும். பணவிரயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனத்துடன் இருக்கவும்.  

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ஒத்துழைப்புடன் நடந்து கொண்டால் நன்மை அடையலாம். பணவரவும் இரட்டிப்பாகும். வியாபாரிகளுக்கு புதிய மாற்றங்கள் தென்படும். வருமானத்திற்குப் பல வழிகளைக் காண்பீர்கள். கூட்டாளிகள் உங்களிடம் இணக்கமாக நடந்து கொள்வார்கள். விவசாயிகளுக்கு தடைகள் நீங்கும். கொள்முதல் லாபம் தொடரும்.  

அரசியல்வாதிகள் சிலருக்கு புதிய பதவிகள் தேடிவரும். பலருடைய பாராட்டையும் பெறுவீர்கள். கலைத்துறையினர் கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள். சக கலைஞர்களும் உதவுவார்கள். பெண்மணிகள் பெரியோர்களின் ஆசியுடன் திட்டமிட்ட வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

மாணவமணிகள் அதிக மதிப்பெண்களை அள்ளுவார்கள். கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 14,18.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உற்றார் உறவினர்கள் உங்களுடன் ஒற்றுமையாக இருப்பார்கள். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள்.  பண வரவும் சிறப்பாகவே காணப்படும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களைக் கண்மூடித்தனமாக நம்புவது கூடாது. உழைப்புக்குத் தகுந்த ஊதியம் மட்டுமே கிடைக்கப் பெறுவீர்கள். 

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் உங்களிடமிருந்து சற்று ஒதுங்கியே இருப்பார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும் என்றாலும் பருப்பு போன்ற நவதானியங்களைப் பயிரிட்டு கூடுதல் லாபத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். மாற்றுக் கட்சியினரும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். கலைத்துறையினர் சிறப்பான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். பெண்மணிகள் கணவரின் அன்பைப் பெறுவீர்கள். மேலும் நிதானமாகப் பேசுவது நல்லது. 

மாணவமணிகள் நாளை படித்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதைத் தவிர்க்கவும். விளையாடும் போது கவனமாக இருக்கவும். 

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 13,18. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியுடன் முடியும். பணவரவுக்கு எந்தக் குறையும் ஏற்படாது. தொழிலில் ஸ்திரத் தன்மை உண்டாகும். உடன்பிறந்தோர் வழியில் கவனத்துடன் நடந்து கொள்ளவும். இறைவழிபாடு, தியானத்தை மேற்கொள்ளவும். 

உத்தியோகஸ்தர்கள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும் . வேலையில் கவனம் செலுத்தவும். வியாபாரிகள் புதிய வழிகளில் லாபத்தைக் காண்பீர்கள், கூட்டாளிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும் . பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.  

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு சுமாராகவே கிடைக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையோப் பெறுவார்கள். ஆகையால் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும். 

பெண்மணிகள் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கலாம். மாணவமணிகள் விளையாட்டைக் குறைத்துக்கொண்டு கல்வியில் நாட்டம் செலுத்தவும். கடுமையாக உழைத்தால்தான் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 15,18. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com