போகிப் பண்டிகை பற்றிய இந்தத் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?

போகிப் பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்தப்....
போகிப் பண்டிகை பற்றிய இந்தத் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?


போகிப் பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையின் பெயர் போக்கிப் பண்டிகை என்பதாகும். இது பின்னர் மருவி போகிப் பண்டிகை என்றாகி விட்டது. இந்த நாள் பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிட்ட அரிசியை மார்கழியில் அறுவடை செய்து, மார்கழி கடைசி நாள் அன்று புதிதாக வீட்டிற்குக் கொண்டு வருவார்கள். 

காப்புக் கட்டுதல்

போகிப்பண்டிகையின் தொடக்கமே வீட்டில் காப்புக் கட்டும் நிகழ்ச்சியாகும். தைத்திருநாளை வரவேற்க, வீட்டின் கூரையில் பூ காப்புக் கட்டிய பிறகே, பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. காப்புக் கட்டுவதின் முக்கிய நோக்கம் பாதுகாப்பு, ஆரோக்கியம் கிடைக்கும் எனவும், சுத்தம் செய்த வீட்டிற்குள் கெட்டது எதுவும் வராமல் இருப்பதற்காவும் மாவிலை, வேம்பு இலை, ஆவாரம் பூ ஆகியவற்றை சேர்த்து கட்டப்படும். 

இந்திரனுக்கு நன்றி செலுத்துதல்

மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவருக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவர் இந்திரன். இந்திரனுக்குப் போகி என்றொரு பெயர் உண்டு. மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்!. எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனைப் போகியன்று பூஜித்து நன்றி செலுத்துவார்கள். 

விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் எனவும், தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பதே இந்த கொண்டாடத்தின் வெளிப்பாடாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com