சேத்துப்பட்டு கருக்காத்தம்மனுக்கு 10,08,000 வளையல் அலங்காரம்

சேத்துப்பட்டு அருள்மிகு ஸ்ரீ கருக்காத்தம்மன் ஆலயத்தில் 10,08,000 வளையல் அலங்காரம் மற்றும் 1008 நலங்கு வைபவம் 19.01.18 அன்று நடைபெறுகிறது.
சேத்துப்பட்டு கருக்காத்தம்மனுக்கு 10,08,000 வளையல் அலங்காரம்

சேத்துப்பட்டு அருள்மிகு ஸ்ரீ கருக்காத்தம்மன் ஆலயத்தில் 10,08,000 வளையல் அலங்காரம் மற்றும் 1008 நலங்கு வைபவம் 19.01.18 அன்று நடைபெறுகிறது.

நிகழும் ஹேவிளம்பி வருடம் தை மாதம் 6-ம் நாள் 19.01.18 வெள்ளிக்கிழமை த்விதீயை திதி, அவிட்டம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் நம் திருக்கோயிலில் குடிகொண்டிருக்கும் நம் அன்னை ஸ்ரீ கருத்தாத்தம்மன் 10,08,000 (பத்து லட்சத்து எட்டாயிரம்) வளையல்களால் மிகப் பிரம்மாண்டமான அலங்காரத்தில் காட்சியருள இருக்கிறாள். 

அன்று காலை 7 மணி முதல் பகல் 10 மணி வரை கர்ப்பரட்ஷாம்பிகை ரூபத்தில் வீற்றிருக்கும் நம் அன்னைக்கு நலங்கு வைபவமும் அன்று நடை திறந்தது முதல் இரவு வரை சீமந்த சாப்பாடு அன்னதானமும் நடைபெறும். 

குழந்தை பாக்கியம் வேண்டும் பக்தக்ரள் இவ்விழாவில் கலந்துகொண்டு அன்னைக்கு நலங்கு இட்டு சீமந்த சாப்பாடு சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது உண்மையே. பின் வரும் சிறப்பு விருந்தினர்கள் முதலில் அன்னைக்கு நரங்கிட்டு இவ்விழாவினை தொடங்கி வைக்க உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

மாபெரும் சிறப்பு பெற்ற இந்த சீமந்த பெருவிழாவில் கலந்துகொண்டு அன்னையின் பேரருளைப் பெற்று நலமுடன் வாழ அன்புடன் அழைக்கின்றோம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com