நட்சத்திரங்களில் சிறந்தது எது? 

மேற்சொன்ன நக்ஷத்ரங்களில் ஒரு குழந்தை பிறந்த உடனே நிறையப் பேர் சொல்வது இந்த கருத்துதான். 
நட்சத்திரங்களில் சிறந்தது எது? 

27 நட்சத்திரங்களில் எது சிறந்தது? இதைப் பற்றி தினமணி ஜோதிடர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

நீங்கள் மூல நக்ஷத்ரமா - அப்படீன்னா மாமனாருக்கு ஆகாது.

ஆயில்ய நக்ஷத்ரமா - அப்படீன்னா மாமியாருக்கு ஆகாது.

சித்திரை நக்ஷத்ரமா - சித்திரை அப்பன் தெருவிலே.

பெண் கேட்டை நக்ஷத்ரமா - கட்டிக்கப்போறவன் அண்ணனுக்கு ஆகாது.

பூராடம் நக்ஷத்ரமா - காராடும், நூலாடாது.

திருவோணமா - அது ஒரு ஓணமா இருக்கும்.

இது போன்ற தகவல்களுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. மேற்சொன்ன நக்ஷத்ரங்களில் ஒரு குழந்தை பிறந்த உடனே நிறையப் பேர் சொல்வது இந்த கருத்துதான். 

27 நக்ஷத்ரமும் நல்ல நக்ஷத்ரம் தான் - 12 ராசிகளும் நல்ல ராசிகள்தான். எந்த நக்ஷத்ரமும் கெட்ட நக்ஷத்ரமல்ல - எந்த ராசியும் கெட்ட ராசியல்ல. இது எதையும் நம்ப வேண்டாம். இதுவே உண்மை. நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பத்தைச் சார்ந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com