பழனியில் முதன்முறையாக 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. 
பழனியில் முதன்முறையாக 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை

பழனி: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இதை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரை வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்கள் புகார் அளிப்பதற்காக 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படும் வகையில் கோயில் தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது. 

04545 - 240293, 241293 என்ற எண்ணில் மக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். இதுமட்டுமன்று 1800 425 9925 என்ற கட்டணமில்லா எண்ணில் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். 

இந்தாண்டு முதன்முறையாக 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்று பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com