பூர்வீக வீட்டிற்கும் வாஸ்து சாஸ்திரத்துக்கும் தொடர்புண்டா? 

வாஸ்து பார்க்க வரும் அனைவரும் இந்த கேள்வியை தான் அடிக்கடி எழுப்புகின்றனர்? என்னவென்றால்,
பூர்வீக வீட்டிற்கும் வாஸ்து சாஸ்திரத்துக்கும் தொடர்புண்டா? 

வாஸ்து பார்க்க வரும் அனைவரும் இந்த கேள்வியை தான் அடிக்கடி எழுப்புகின்றனர்? என்னவென்றால், நாங்கள் பூர்வீக சொத்தினை விட்டுவிட்டு காலி செய்து வந்துவிட்டோம். ஆனால், அதில் மீன்டும்  வீடு கட்டலாம் என்று உள்ளோம் அது சரியா? தவறா?.

பூர்வீகம் எனக்கு ஆகாது என்று எனது மனைவியின் பெயரில் அந்த சொத்தை மாற்றி பத்திரப்பதிவு செய்து விட்டேன். அது ஏதாவது எங்களை பாதிக்குமா? எங்களுடைய பூர்வீகத்தை வேறொருவருக்கு விற்றுவிட்டு பிறகு அதையே நாங்கள் திருப்பியும் வாங்கி கொண்டோம். அது ஏதாவது எங்களை பாதிக்குமா? இப்படி பூர்வீகம் சம்பந்தமான நிறைய கேள்விகள் எல்லோருடைய மனதிலும் எழும்.

ஒரு நபருக்கு பூர்வீகமோ அல்லது சொந்த வீடோ எதுவானாலும், அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்றால் அந்த வீட்டின் வாஸ்து குறையுள்ளது என்பது அர்த்தம். வீட்டை விட்டு வெளியேறுவதில் பலவகை காரணங்கள் உண்டு. 

வேலைக்காக வெளியூர் அல்லது வெளிநாட்டில் தங்கி விடுவது, வியாபார ரீதியாக அடிக்கடி வெளியூர் போய் வருவது, மனைவியை பிரிந்து கணவன் வருடகணக்கில் வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருப்பது, கணவன் - மனைவிக்குள் பிரிவினை ஏற்பட்டு பிரிந்து இருப்பது, குழந்தைகளை விடுதியில் தங்க வைத்து படிக்க வைப்பது இது போன்ற பிரச்னைகளால் தான் நீங்கள் உங்கள் பூர்வீகத்தை விட்டுவிட்டு வந்திருப்பீர்கள். 

ஆனால், நாம் குடியிருக்கும் வீட்டில் ஏதேனும் குறை இருக்குமோ என்பதைப் பற்றி யாரும் யோசிப்பதே இல்லை. சிலர் உடனே விற்றுவிடுவார்கள் இல்லையெனில் காலி செய்துவிடுவார்கள். அங்கு தான் நாம் தவறு செய்கிறோம். முதலில் வாஸ்து குறைபாடு உள்ளதா என்பதை கூர்ந்து கவனித்து அதை சரிசெய்ய வேண்டும். பின்னர், அதில் கட்டியுள்ள கட்டிட அமைப்பில் ஏதேனும் தவறு உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம். 

அன்றைய நாளில் கட்டிய கட்டிடங்கள் பெரும்பாலும் வாஸ்து விதிகளுக்கு உட்படாதவைகளே பெரும்பாலும் இருக்கும். இப்போது அதே இடத்தில் கட்ட கூடிய கட்டிடம் வாஸ்துவின் அடிப்படை விதிகளுடன் கட்டும் போது அவை எந்த மாதிரி சொத்தாக இருந்தாலும் உங்களுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை.

பூர்வீகசொத்து, நான் வாங்கிய சொத்து, மாமியார் கொடுத்த சொத்து, மாமா கொடுத்த சொத்து என்றெல்லாம் எதுவும் கிடையாது. நீங்கள் கட்டக்கூடிய கட்டிடங்கள் மட்டுமே உங்களுடைய வாழ்வை தீர்மானிக்கும். அடிப்படையில் இடம் சதுரமாகவும், செவ்வகமாகவும் மட்டுமே இருக்க வேண்டும். அதாவது 1:2 என்ற விகிதத்தில் மட்டுமே இருக்க வேண்டும் அதை தவிர்த்து மற்ற அளவுகள் தவறானவைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com