பல ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாபெரும் பிரதோஷம் இன்று!

பல ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் "மாபெரும் பிரதோஷம்" இன்று!எம்பெருமானைப் பூஜிக்க வேண்டிய நாள்!
பல ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாபெரும் பிரதோஷம் இன்று!

பல ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் "மாபெரும் பிரதோஷம்" இன்று!எம்பெருமானைப் பூஜிக்க வேண்டிய நாள்! பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாட்டு முறையே பிரதோஷ வழிபாடு என்றும், அன்றைய தினம் கடைப்பிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் என்றும் அழைக்கப்படுகின்றது.

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதமாகும். பிரதோஷ வேளையில் சிவபெருமானை வழிபட்டால் ஈசனின் பூரண அருள் கிடைக்கும். பிரதோஷ வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும். பிரதோஷ கால விரதம் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது சிறந்தது.

பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். பிரதோஷம் திங்கட்கிழமையில் வரும்போது சோமவார பிரதோஷம் என்றும் சனிக்கிழமையில் வரும்போது சனிப்பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகின்றது. இவ்விரண்டு பிரதோஷ நாட்களும் மிகச் சிறப்பானது.

தை மாதத்தில் வரும் பிரதோஷத்தின் சிறப்பு

29.01.2018 (தை 16) திங்கட்கிழமையன்று திரயோதசி திதி மற்றும் திருவாதிரை நட்சத்திரம் கூடிய நாளில் வரும் பிரதோஷம் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தத் தை மாத சோமவார பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்து வழிபட்டால், வாழ்வில் தடைகளையெல்லாம் தகர்ந்துவிடும்.

புராணக் கதை

திங்கட்கிழமை திரயோதசி திதி மற்றும் திருவாதிரை நட்சத்திரம் கூடிய நன்னாளில் தான் ஸ்ரீசைலம் என்ற தளத்தில் கொடிய பாவங்களை செய்து வாழ்ந்து வந்த வறிய அந்தணன் சிவபெருமானை வணங்கியதால் வாழ்விற்குத் தேவையான அனைத்துச் செல்வங்களையும் பெற்றான்.

பாவங்களைச் செய்து வந்த அந்தணனுக்கே அன்றைய தினத்தில் இறையருள் கிடைத்ததால் நாமும் மாபெரும் பிரதோஷ தினமான இன்று சிவபெருமானை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் அடைந்து செல்வ செழிப்புடன் வாழலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com