ஆடி வெள்ளியில் 2 ஆயிரம் கிலோ பழங்களுடன் அருளிய அம்மன்: பக்தர்கள் நெகிழ்ச்சி

ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. 
ஆடி வெள்ளியில் 2 ஆயிரம் கிலோ பழங்களுடன் அருளிய அம்மன்: பக்தர்கள் நெகிழ்ச்சி

ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

தமிழ் மாதங்களில் வரும் ஆடி மாதமானது பெண் தெய்வத்துக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து அம்மன் கோயில்களிலும் தினமும் காலை,  மாலை என சிறப்பு வழிபாடு நடக்கும்.

இந்நிலையில், கோவையில் அமைந்துள்ள மாகாளி அம்மன் கோயிலில் 2 ஆயிரம் கிலோ பழங்களைக் கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்துச் சென்றனர். 

இக்கோயிலில் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறுவதாகவும், எனவே இங்கு வந்து தவறாமல் அம்மனை தரிசித்துச் செல்வதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர். மேலும் ஒவ்வொரு வருடமும் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com