உலக புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோவிலுக்கே இந்த நிலை! இது கவனிக்கப்படுமா? 

தஞ்சாவூர்: உலக புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல்..
உலக புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோவிலுக்கே இந்த நிலை! இது கவனிக்கப்படுமா? 

தஞ்சாவூர்: உலக புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருப்பதால் கோயிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. 

யுனெஸ்கோ நிறுவனம், தஞ்சைப் பெரிய கோவிலை உலக பராம்பரிய சின்னமாகவும் அறிவித்துள்ளது. தினமும் இந்தக் கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த 2014-ல் ஒன்றரை கோடி மதிப்பில் 31 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதில், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட 10 கேமராக்கள் மூலம் 1000 மீட்டர் சுற்றளவில் எந்தவொரு நிகழ்வையும் துல்லியமாக படம் பிடித்து பதிவு செய்ய முடியும். 31 கேமராக்களில் ஒன்று மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. 

இந்த கேமராக்களை கண்காணிக்கச் சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட்டனர். ஆனால், கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக கேமராக்களை இணைக்கும் ஒயர்கள் அறுந்து கிடப்பதால் செயல்படாமல் காட்சி பொருளாகவே உள்ளன. இதனால், கோவிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து மேலிடத்தில் புகார் தெரிவித்துள்ளதாக தொழில்துறை முதல்நிலை பராமரிப்பு உதவியாளர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com