காரைக்காலில் பழமை வாய்ந்த சித்தர் கோயில் கண்டுபிடிப்பு

காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சித்தர் கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
காரைக்காலில் பழமை வாய்ந்த சித்தர் கோயில் கண்டுபிடிப்பு


காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சித்தர் கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

காரைக்கால் மாவட்டம் நிரவி அடுத்த ஊழியப்பத்து கிராமத்தில் 500-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்து வருவதால், மக்கள் பக்கத்து ஊரில் உள்ள சித்தரை அணுகினர். சித்தர் ஊழியப்பத்து பகுதிக்கு வரும் போது இடையில் நிறுத்தச்சொல்லி அங்கிருந்த காட்டுக்குள் சென்றார். 

அங்குச் சென்ற சித்தர் திடீரென அங்கிருந்த கோயிலுக்குள் சென்று அமர்ந்து பூஜை செய்தார். பின்னர், இங்குச் சிவனை வழிபட்டு வந்த சித்தர் ஒருவர் கபாலமோட்சம் அடைந்துள்ளதாகவும், இவருக்கான சமாதி இக்கோயிலினுள் உள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையடுத்து, அவர் சொல்லிற்கிணங்க ஊழியப்பத்து ஊரில் உள்ள மக்கள் அப்பகுதியைத் தூய்மைப்படுத்தி, கபால மோட்சம் அடைந்த சித்தரை வழிபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதியில் இருந்தும் மக்கள் இங்கு வந்து சித்தரை வழிபடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com