புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற குட்டிக்குடி திருவிழா 

திருச்சியில், புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் பிரசித்திப்பெற்ற குட்டிக்குடி திருவிழாவில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. 

திருச்சியில், புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் பிரசித்திப்பெற்ற குட்டிக்குடி திருவிழாவில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. 

வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் குட்டிக்குடித்தல் திருவிழா பிரசித்திப்பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ம் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 

மார்ச் 6-ம் தேதி காளி ஓட்டம் நடைபெற்று, அன்றிரவு வீதியுலா கொண்டுவரப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடித்தல் வைபவம் இன்று (மார்ச் 8) புத்தூர் மந்தையில் நடந்தது. 

காளி ஓட்டமாக வந்த அம்மனின் முன்னிலையில் தாரை, தப்பட்டை, உடுக்கு அடித்து மருளாளிக்கு அருள் வர வைத்தனர். அதன்பின்பு நூற்றுக்கணக்கான ஆடுகள் பலி கொடுக்கப்பட்டது. இவ்விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்சி புத்தூர் பகுதியில் திரண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com