இன்பகனம் என்றால் என்ன?

இன்பகனம் என்றால் என்ன?

தாருகாவனத்தில் சில ரிஷிகள் கூடுகிறார்கள். உருவ வழிபாட்டிற்கு சிவ ஆராதனைக்கும்

தாருகாவனத்தில் சில ரிஷிகள் கூடுகிறார்கள். உருவ வழிபாட்டிற்கு சிவ ஆராதனைக்கும் எதிராக சில கொள்கைகளை உருவாக்கி அதை மீமாம்சம் என அழைத்து அதையே பின்பற்ற முடிவு செய்கிறார்கள். இது ஏற்கனவே யோக மீமாம்சை அல்லது யோகாத்ம மார்க்கம் என்ற பெயரில் தொல்பழங்காலம் முதல் இருந்து வந்துள்ளது. சத்-சித், பிரகிருதி-புருஷன் போன்ற பல தத்துவார்த முரண் இயக்கங்களை இந்த நோக்கு உருவகித்துள்ளது. முரண்பாடுகள் வழியாக திரண்டுவரும் உண்மையை அறிய முயல்வது இது. உண்மையை அறிவதால் தவறில்லை,

இத்தகைய மீமாம்ச கொள்கைகளை பின்பற்றிய ரிஷிகள் அங்கு யாக ஓமம் செய்து சிவ நிந்தனை செய்ய ஆரம்பித்தனர். ஆணவம் அவர்கள் கண்களையும் அறிவையும் மறைத்துவிட்டது. அவர்களுக்க்கு பாடம் கற்பிக்க நினைத்த சிவன், மனித உருவம் எடுக்க முடிவு செய்தார். சர்வ லட்சணம் பொருந்திய அழகான இளம் பெண் வடிவம் எடுத்து மகாவிஷ்ணு மற்றும் ஆதிகேசன் சகிதமாக தாருகா வனத்தை அடைகிறார்.

அங்கு சிவன் விஷ்ணு மற்றும் ஆதிகேசன் இருவருடைய தாளத்திற்கு ஏற்றபடி, அந்த இசைக்கு தகுந்தாற்போல தாண்டவக் கூத்து ஆடத் தொடங்கினான். மீமாம்ச ரிஷிகள் அதனைக் கண்டு கோபம் அடைந்து சிவனை கடுமையாக நிந்தனை செய்து துரத்த, அதைச் சற்றும் பொருட்படுத்தாத அவன் தாண்டவத்தை இடைவிடாது நிகழ்த்துகிறான். இதனால் வேறு வழியின்றி சிவனை அழித்துவிட முடிவெடுக்கின்றார்கள். முதலில் யாக குண்டத்திலிருந்து மந்தர சக்தி மூலம் ஒரு பெரிய புலியை உருவாக்கி சிவனை அடித்துக் கொல்ல அனுப்புகிறார்கள். சிவன் அந்தப் புலியைப் பிடித்து அதன் தோலை உரித்து, இடையினில் ஆடையாகக் அணிந்து கொள்கிறார். அதைக் கண்டு எரிச்சலான முனிவர்கள் மீண்டும் யாக குண்டத்திலிருந்து ஒரு விஷப் பாம்பை வரவழைத்து, சிவனை நோக்கி ஏவி விட, சீறி வந்த பாம்பைச் சாந்தப்படுத்திய சிவன், அதையே ஒரு மாலையாக்கி தன் கழுத்தைச் சுற்று அணிந்து கொள்கிறார். தாண்டவம் நொடி தவறாமல் தொடர்கிறது

கடுப்படைந்த அந்த கர்வம் பிடித்த ரிஷிகள் கடைசியாக முயலகன் எனும் குட்டி அரக்கனை உருவாக்கி, சிவனை சாகச் செய்ய ஏவினர். ஆவேச கோஷத்துடன் பாய்ந்து வந்த முயலகனை சிவன் தனது வலது கால் நுனியால் மிதித்து, அவனுடைய முதுகு எலும்பை முறிக்கிறான். பின்பு முயலகனின் முதுகு மேல் தனது வலது காலை ஊன்றியபடி இடது காலைத் தூக்கி ஆனந்த நடனமாடுகிறான். சிவனை ஏதும் செய்ய முடியாது என்பதை அறிந்து, தங்களின் இயலாமையை உணர்ந்த ரிஷிகள் முனிவர்கள் தங்களது யாகத்தை கைவிட்டு சிவனிடம் தஞ்சமடைகிறார்கள். சிவ நடனத்தின் சிறப்பையும் மகிமையும் கண்டு களித்து முக்தி அடைகிறார்கள்.

சத் சித் ஆனந்த சொரூபியாக விளங்கும் சிவன் இன்பகனம் ஆனவன் எனச் சைவ சிந்தாந்தம் சாத்திரம் கூறுகிறது. இன்பகனம் என்பதன் அர்த்தம் சிவன் தன்னை வேண்டி வணங்கும் அடியார்களுக்கு இன்பத்தை அளிப்பவன் ஆனால் ஒரு போதும் தனக்கான இன்பத்தை அனுபவிக்காதவன். முக்கண்ணன் விருப்பு வெறுப்பு அற்றவன். ஞான மயமானவன்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்க்கு

யாண்டும் இடும்பை இல.

திருவள்ளுவர் கடவுள் வணக்கத்தில் பாடியுள்ள செய்யுளின் பொருளும் இதுவே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com