பொன்மொழிகள்!

பொன்மொழிகள்!

பொன்மொழிகள்!

உத்தம மனிதன் கர்ம பலன்களைவிட்டு, ஆத்மஞானத்திலும் புலனடக்கத்திலும் வேதாந்தச் சிந்தனையிலும் முயற்சியுடையவனாக இருக்க வேண்டும். இதுதான் பிறவிப் பயன்.
- மனு ஸ்மிருதி

சத்தியத்தை ஆதாரமாகக் கொள்ளாத புண்ணிய பிறவியோ, வாழ்க்கையோ இல்லை. சத்தியம் என்பது ஒரு தனிமையான புண்ணியமாக மட்டும் அமையாமல், எல்லாப் புண்ணியங்களின் நிலைக்களமாகவும்
அம்சமாகவும் அமைகிறது.
-
வேதநெறி

இறைவனே நாங்கள் புகழ் நிறைந்து வாழ வேண்டும். எங்களுக்குக் கிடைக்கும் மதிப்பு மரியாதைகளுக்கெல்லாம் அடிப்படையில் புனிதம் நிலவ வேண்டும். நல்ல செயல்களின் மூலம் கிடைத்த ஆத்மபலத்தினால் எங்கள் ஜீவசக்தி வளர வேண்டும். இவற்றின் பயனாக எங்களுடைய வாழ்க்கை, ஒளி படைத்த திசைகளைப் போலப் பரந்து விரிந்து ஒளிவீசித் திகழட்டும்.
- அதர்வண வேதம்

அச்சம் தவிர். காற்றும் இடைவெளியும் எதற்கும் அஞ்சுவதில்லை, மெலிவுறுவதில்லை. அது போல, நற்பண்புகள்கொண்ட மக்களே நீங்களும் எதற்கும் அஞ்சாதீர்கள், மெலிவுறாதீர்கள். பெருவீரம் எதற்கும் அஞ்சுவதில்லை, மெலிவதில்லை, மரணமும் அமுதத்தன்மையும் எதற்கும் அஞ்சுவதில்லை, மெலிவதில்லை. சத்தியம் எதற்கும் அஞ்சுவதில்லை, மெலிவதில்லை, கடந்த காலமும் எதிர்காலமும் எதற்கும் அஞ்சுவதில்லை. மெலிவதில்லை. இவை போலவே நற்பண்புகள் உள்ள மக்களாகிய நீங்களும், எதற்கும் அஞ்சாதீர்கள், மெலிவுறாதீர்கள், துணிவுதான் மனித வாழ்க்கையாகும்.
- அதர்வண வேதம் 215

தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com