பொன்மொழிகள்

இந்த உலகில் மேன்மையும், பிறகு மோட்சமும் எதனால் அடையப்படுமோ அதன் பெயர்தான் தர்மம்.  

இந்த உலகில் மேன்மையும், பிறகு மோட்சமும் எதனால் அடையப்படுமோ அதன் பெயர்தான் தர்மம். 
- வைசேஷிக தர்மம்,1,1,2

ஒருவன் (தர்ம நெறியில் வாழ்ந்து) மனமகிழ்ச்சியுடன் இருப்பதும், சாந்தமான மனநிலையும், மெüனமும், மனதை அடக்கியாள்வதும், மனத் தூய்மையும் மனதால் செய்யும் தவத்தில் அடங்கும். 
-பகவத்கீதை 1716

நெருப்பில் நெய்யை ஊற்றினால், அந்த நெருப்பு மேலும் கொழுந்துவிட்டு எரிகிறது. அதுபோல் உலகில் தர்மம் தவறிய ஆசைகளை நாம் அனுபவித்தால், அவற்றின் மீது இருக்கும் ஆசை மேன்மேலும் வளருமே தவிர குறைந்து அடங்குவது இல்லை. 
-பாகவதம் 9,19,14

பொய் பேசுகிறவர்களைக் கண்டால் மக்கள் விஷப் பாம்பைக் கண்டதுபோல் ஒதுங்கிப் போகிறார்கள். உலகில் சத்தியமே தலைசிறந்த தர்மம். அதுவே சொர்க்கத்தின் முதல்வாயில், மூலகாரணம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  
- வால்மீகி ராமாயணம், அத்தியாயம் 109,14

தன் உள்ளத்திலிருந்து பொங்கி எழும் கோபத்தை  நாகப்பாம்பு தன் சட்டையை உரிப்பதுபோல் உதறிவிடக் கூடியவனே, உண்மையில் "மனிதன்' என்று 
சொல்லத்தக்கவன். 
- வால்மீகி ராமாயணம், சுந்தரகாணடம் 55,7

'தங்களுக்குப் பெரிய நன்மை கிடைக்க வேண்டும்' என்று நினைப்பவர்கள், ஆத்மஞானம் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். எல்லாத் துயரங்களும், துக்கங்களும் ஆத்மஞானம் பெற்றதும் அழிந்துபோகும். 
- யோக வசிட்டம் 5,75.46 

'எதில் அகிம்சை இடம் பெறுகிறதோ, அதுவே தர்மம்' என்பது தர்மாத்மாக்களான பெரியோர்களின் முடிவாகும்.
- மகாபாரதம், சாந்தி பர்வம், 109,12

எவரும் எந்தப் பிராணிக்கும் ஹிம்சை செய்யக் கூடாது, எதற்கும் துன்பம் தரக் கூடாது, எல்லோரும் எல்லா உயிர்களிடமும் அன்புடன் இருக்க வேண்டும். இந்த நிலையில்லாத வாழ்க்கையில் எவரிடமும் பகைமை கொள்ள வேண்டாம். 
- மகாபாரதம், சாந்தி பர்வம், 278, 5

தொடர்ந்து ஆன்மிகப் பயிற்சி செய்வதன் மூலம், மனதை ஒருமுகப்படுத்த முடியும். எனவே பிரார்த்தனை, வழிபாடு, தியானம் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்துகொண்டிரு.   
-சுவாமி பிரம்மானந்தர் 

வள்ளலார் பொன்மொழிகள்

சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் முதலியவைகளை அறவே நீக்க வேண்டும்.

அன்பும் இரக்கமுமே வாழ்க்கையின் அடிப்படை.  உண்மையைச் சொல், அது உனது வார்த்தைகளைப் பாதுகாக்கும்.

யாரிடத்தில் தயவு அதிகம் இருக்கிறதோ அவரிடத்தில் கடவுள் இருக்கிறார்.

எனக்குச் சித்திகள் எல்லாம் தருகின்ற தெய்வமாக விளங்குவது சத்தியமே.

எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவித்து சம உரிமை வழங்குவோரின் மனதில்தான் இறைவன் வாழ்கிறான்.

ஏதும் இல்லாத ஏழைகளுக்கு இரக்கப்பட்டு மனது உவந்து ஈவதே ஜீவகாருண்யம்.

வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்கிற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.

ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com