விளக்கே..! திருவிளக்கே..!

எண்ணியது ஈடேற அதிகாலை 2.00 மணி முதல் காலை 6.00 மணிக்குள் விளக்கேற்றவும்.
விளக்கே..! திருவிளக்கே..!

எண்ணியது ஈடேற அதிகாலை 2.00 மணி முதல் காலை 6.00 மணிக்குள் விளக்கேற்றவும்.

இரவு 9.00 மணிக்கு பிறகு பிரம்ம முகூர்த்தம் முன்னால் விளக்கு ஏற்றவோ, விளக்கு எரியவோ கூடாது.

பூஜை அறையில் விளக்கு ஏற்றும்போது விளக்கு தெற்கு நோக்கி இருக்கக் கூடாது.

அகல் விளக்கு ஏற்றினால் கூடுதல் சக்தி இருக்கும்.

தாமரை தண்டு திரி விளக்கு ஏற்றினால் பூர்வ ஜென்ம பாவம் விலகும். பணம் சேரும்.

பஞ்சு திரி விளக்கேற்றினால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.

பசு நெய் விளக்கேற்றினால் அனைத்து உடல்நோய் பாதிப்பிலிருந்தும் பாதுகாக்கும். நீண்ட ஆரோக்கிய வாழ்க்கை கிடைக்கும். 

பித்தளை விளக்கேற்றினால் உங்கள் பாவங்கள் விலகும். 

குலதெய்வத்துக்கு விளக்கேற்றும்போது வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், பசு நெய் சேர்த்து கலந்து ஏற்றவும்.

பெருமாளை வணங்க இலுப்பை எண்ணெய் ஏற்றவும்.

எரியும் விளக்கு, எரியும் கற்பூரம், எரியும் ஊதுபத்தியை வாயால் ஊதி அணைக்கக் கூடாது.

ஸ்ரீ மகாலட்சுமிக்கு விளக்கேற்ற சுத்தமான பசுநெய் பயன்படுத்தவும்.

கோயிலில் விளக்கேற்றும் போது திரியை சரி செய்யும்போது உங்கள் விரல் எண்ணெயை தொட நேரிடும். விரலில் பட்ட எண்ணெயை தலையில் தடவக்கூடாது.

- சிவகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com