ஏக தின லக்ஷ ஆவர்த்தி கணபதி ஹோமம்!

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் மார்கழி மாதம் 17-ம் ஆம் தேதி (01.01.2017)
ஏக தின லக்ஷ ஆவர்த்தி கணபதி ஹோமம்!

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் மார்கழி மாதம் 17-ம் ஆம் தேதி (01.01.2017) ஞாயிற்றுக்கிழமையும் சுக்லபக்‌ஷ திரிதியையும் திருவோண நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை 7 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஸ்ரீவிநாயகருக்கு ஏக தின லக்‌ஷ ஆவர்த்தி ஹோமம் ஸ்ரீமஹாகணபதி மற்றும் ஸ்ரீகாயத்ரி தேவியின் அருளால் நடைபெற இருக்கிறது. இந்த ஹோமத்தை ஸ்ரீ வித்யா காயத்ரி அறக்கட்டளை மற்றும் மாம்பலம் ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர் இணைந்து வழங்குகிறார்கள்.

நிகழ்ச்சி நிரல்

நாள் 01.01.2017 (காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை)

இடம் : ராமு கல்யாண மண்டபம் (தெற்கு பூங்கா தெரு, அம்பத்தூர்)

காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஸ்ரீ விநாயகருக்கு ஏக தின லக்‌ஷ ஆவர்த்தி ஹோமம்.

காலை 10.00 மணி முதல் மதியம் 1 மணி வரை ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமம் பாராயணம், திருப்புகழ் பாராயணம்

மாலை 5 மணிக்கு 2017ம் வருட புத்தாண்டு ராசிபலன்கள் வழங்குபவர் – தினமணி – தினகரன் – தீபம் – ஞான ஆலயம் – Redpix பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA, MBA, MA, செல் – 7845119542

காலை 8 மணி முதல் அன்னதானம்

திருமணத்தடை நீங்க, சந்தான பாக்கியம் கிடைக்க, வெளிநாடு செல்வதற்கு உள்ள தடை அகல, வீடு மனை வாங்குவதற்கு இருக்கும் சுணக்கம் நீங்குவதற்கு, குழந்தைகளின் கல்வி வளர்ச்சி பெற, கடன் பிரச்னைகள் தீர்வதற்கு, தீராத நோய்கள் தீர்வதற்கு ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அகலுவதற்கு போன்ற அனைத்து பிரச்னைகள் தீர்வதற்கும் சங்கல்பத்தில் கலந்து கொள்வது சிறந்தது.

108 விதமான மூலிகைகள் கொண்டு ஹோமம் செய்யப்படுகிறது.

ஹோமத்திற்கு நெய் – பொருட்கள் – பழங்கள் – புஷ்பம் – அன்னதானத்திற்கு பொருட்கள் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும்.

ஹோமத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் பெருங்குளம் சுப்பிரமணிய ஜோஸ்யர் (பரம்பரை ஜோதிடர் மற்றும் 5000 திருமணங்களுக்கு மேல் நடத்தி வைத்தவர்) அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளவும்.

குறிப்புகள்

  • இந்த ஹோமத்தில் அனைவரும் ஸங்கல்பம் செய்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் கிடையாது.
  • ஹோமம் மற்றும் அன்னதானத்திற்கு பொருள் உதவி மற்றும் பண உதவி ஏற்றுக் கொள்ளப்படும்.
  • ஹோமத்தில் ஸங்கல்பம் செய்து கொள்ளும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.
  • வெளியூரில் இருக்கும் நபர்களுக்கு ஸங்கல்பம் செய்து பிரசாதம் தபாலில் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
  • ஹோமத்தில் பங்கு பெறும் நபர்களுக்கு ஜெபிக்கப்பட்ட கயிறு கட்டப்படும், வேண்டுபவர்களுக்கு மட்டும்.
  • ஹோமத்தில் பங்கு பெறும் அனைவருக்கும் பிரசாதத்துடன் செல்வ நிலை மேலோங்க தன ஆகர்ஷண சந்தன பாக்கெட்டு அளிக்கப்படும்.

தொடர்புக்கு – ஸ்ரீ வித்யா காயத்ரி அறக்கட்டளை

ஃபோன் – 8939043436 / 8939041417

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com