இசைவிழா!

ஜெயந்தி இசைவிழா தஞ்சாவூர், அய்யம்பேட்டை (ராமச்சந்திரபுரம்), ஸ்ரீ சங்கீத மஹாலில்  

 ஜெயந்தி இசைவிழா

தஞ்சாவூர், அய்யம்பேட்டை (ராமச்சந்திரபுரம்), ஸ்ரீ சங்கீத மஹாலில் சத்குரு வேங்கடரமண பாகவத சுவாமிகளின் 236 ஆவது ஜெயந்தி இசைவிழா மகோத்சவம் மூன்று நாள் விழாவாக சுவாமிகளின் ஜன்ம நட்சத்திரமான மூல நட்சத்திரத்தன்று நடைபெறும்.  
நாள்: 20.2.2017 - 22.2.2017.

சைவத்திருமுறை நேர்முகப் பண்ணிசை பயிற்சி 
ஸ்ரீலஸ்ரீ 24 ஆவது குருமகா சன்னிதானம் அருளாசியுடன் பெண்ணாகடம், ஸ்ரீ மெய்கண்டார் திருக்கோயிலில் சைவத்திருமுறை நேர்முகப் பண்ணிசை பயிற்சி மைய துவக்க விழா நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 94877 88781.
நாள்: 17.2.2017, நேரம்: காலை 10.00 மணி.

திருப்பணி
சென்னை, புழலில் 600 ஆண்டுகள் பழைமை சிறப்புடைய அருள்மிகு ஸ்ரீ திருவீதியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கருவறையில் ஸ்ரீ திருவீதியம்மன் மூன்றடி உயரத்தில் கனிவான பார்வையுடன் வேண்டியதை அருளும் அன்னையாக வீற்றிருக்கிறார். இத்திருக்கோயிலின் சில பகுதிகள் சிதிலமடைந்துள்ளதால் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு நலம் பெறலாம்.
தொடர்புக்கு: 95001 70278 / 99414 15161.

மகாசிவராத்திரி விழா
கும்பகோணம், திப்பிராஜபுரம், சென்னியமங்கலம் ஸ்ரீ உண்ணாமுலை அம்பிகா சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் மற்றும் ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சொக்கநாதர் திருக்கோயிலில் 4 ஆம் ஆண்டு சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
நாள்: 24.2.2017 -25.2.2017. 

சிவாலய ஓட்டம்
மகாசிவராத்திரியை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்திற்கு  உட்பட்ட பழைமையான சிவாலயங்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிவாலய ஓட்டம், குரோம்பேட்டை ஹஸ்தினாபுரம் பகுதியிலிருந்து புறப்படுகின்றது. 
தொடர்புக்கு: கே. கண்ணன்- 98410 20857.
நாள்: 24.2.2017, நேரம்: மாலை 4.00 மணி.

மகாசிவராத்திரி மஹோத்சவம்
திருவிசலூர் ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள் சந்நிதியில் மகாசிவாராத்திரி மகோத்சவம் நடைபெறுகின்றது. இதனையொட்டி, பஜனை, டோலோத்ஸவம், தேவார இன்னிசை, மஹாந்யாஸ ஏகாதச ருத்ராபிஷேகம் நடைபெறும். 
நாள்: 22.2.2017- 24.2.2017.

மகாகும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், கீழ்ப்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சப்தகன்னி உடனாய ஸ்ரீ தஞ்சியம்மன் திருக்கோயில் மிகவும் பழைமையானது. இவ்வாலயத்தில் மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. 
நாள்: 17.2.2017, நேரம்: காலை 8.00 - 9.00 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com