திருவையாற்றில் அப்பர் கயிலாயக்காட்சிக் காண வாரீர்..

ஆருரில் பிறந்தால் முக்தி, அண்ணாமலையை நினைத்தால் முக்தி, ஐயாறு மண்ணை மிதித்தால் முக்தி என்று சொல்லும் அளவுக்கு மிகவும் பெருமை வாய்ந்த ஊர் திருவையாறு.
திருவையாற்றில் அப்பர் கயிலாயக்காட்சிக் காண வாரீர்..

ஆருரில் பிறந்தால் முக்தி, அண்ணாமலையை நினைத்தால் முக்தி, ஐயாறு மண்ணை மிதித்தால் முக்தி என்று சொல்லும் அளவுக்கு மிகவும் பெருமை வாய்ந்த ஊர் திருவையாறு.

தென்கயிலாயம் என்று போற்றப்படும் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனுறை ஐயாறப்பர் கோயிலில் ஆடி அமாவாசையில் அப்பர் கயிலாயக் காட்சி திருவிழா பல ஆண்டுகளாக பெருஞ்சிறப்புடன் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஆண்டு ஹேவிளம்பி வருடம் ஆடி மாதம் 7-ம் தேதி ஜூலை 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அப்பர் திருக்கயிலாயக் காட்சி திருவிழா மிக விமரிசையாக நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு அன்று முழுவதும் இடையறாது திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடக்கும். காலை 7 மணி அளவில் சிவபூஜையும், பகல் 12 மணி அளவில் காவிரியில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரியும், அபீஷ்ட வரத மகாகணபதி சந்நிதிக்கு எதிரில் இருக்கும் திருக்குளத்தில் (உப்பங்கோட்டை) அப்பர் எழுந்தருளி தீர்த்தவாரியும். இரவு 8-9 மணி அளவில் ஐயாறு ஆலயத்தில் அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளுதலும் நடைபெறும். அதற்கு முன் சந்நிதியின் மண்டபத்தில் 200-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் கூடி அப்பரின் பதிகங்களான கூற்றாயினவாறு, சொற்றுணைவேதயன், தலையே நீ வணங்காய், வேற்றாகி விண்ணாகி, மாதர்ப்பிறைக்கண்ணி யானை ஆகிய ஐந்து பதிகங்களை பக்கவாத்தியத்துடன் இசைத்து ஆராதனை செய்வார்கள்.

திருவையாற்றில் அப்பர் கயிலாயக்காட்சிக் காண திருவையாறு சிவ சேவா அறக்கட்டளை உங்களை அன்புடன் வரவேற்கிறது. அனைவரும் வருக எம்பெருமானின் திருவருளைப் பெருக. தொடர்புக்கு - 9976253220, 8939311178.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com