நிகழ்வுகள்

பூஜ்யஸ்ரீ சிவன் சார் ஆராதனை காஞ்சி மகாஸ்வாமிகளின் பூர்வாசிரம இளைய சகோதரர்

ஆராதனை வைபவம்  
பூஜ்யஸ்ரீ சிவன் சார் ஆராதனை காஞ்சி மகாஸ்வாமிகளின் பூர்வாசிரம இளைய சகோதரர் பூஜ்யஸ்ரீ சிவன் சார் அவர்களின் 21 ஆவது ஆராதனை வைபவம் சென்னை தியாகராயநகர் பசுல்லா சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.  சிறப்பு நிகழ்ச்சியாக மகானை பற்றிய சிவசாகரம் எனும் அற்புத தெய்வீக நாடக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  
தொடர்புக்கு: ஜி. சிவராமன் - 9600015230.
நாள்: 14.3.2017.
மகிழமரத்தடி சேவை
திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் மார்ச் - 3 கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகின்றது. முக்கிய நிகழ்வுகள்: 
மார்ச் - 11 கல்யாண சுந்தரர் திருமணம், இரவு மகிழடி சேவை; மார்ச் - 12 கடலில் கடலாடு (தீர்த்தவாரி) உற்சவம்; மார்ச் -13 பந்தம்பறி உற்சவம், 18 திருநடனம்.
தொடர்புக்கு: 044-25733703.
திருக்கல்யாண மகோத்ஸவம்
கும்பகோணம் அருகில் உள்ள தேப்பெருமாள் நல்லூர் ஸ்ரீ லக்ஷ்மிநாராயணப் பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீ ராதாகிருஷ்ண விவாஹ மகோத்ஸவம் பாகவதோத்தமர்களால் நடத்தப்படுகிறது. மார்ச் 11 ஆம் தேதி பெருமாள் கருட சேவையுடன் விழா தொடங்குகிறது. மார்ச் 12 ஆம் தேதி ராதா கல்யாண உத்ஸவம் ஸ்ரீ ஜயதேவ அஷ்டபதி கான பூர்வமாய் நடைபெறும். ஏற்பாடுகளை தேப்பெருமாள் நல்லூர் ப்ராசீன ஸம்ப்ரதாய நாட்டிய நாடக மன்றம் டிரஸ்ட் மற்றும் கிராமவாசிகள் செய்துள்ளனர்.
தொடர்புக்கு: 94436 77936.
நாள்: 11.3.2017, 12.3.2017.
187 ஆம் ஆண்டு விழா
சென்னை, ஓட்டேரி, எண்: 120, ஸ்டாரன்ஸ் சாலை, ஸ்ரீ கிருஷ்ண வேங்கடேசப் பெருமாள் சந்நிதியில் திருநாராயணபுரம் (மைசூர் மேல்கோட்டை) வைரமுடி உற்சவத்திற்கு அடியார்கள் கைங்கரியத்தில் பாதயாத்திரை மூலம் திருக்குடைகள் சமர்ப்பிக்கும் 187 ஆம் ஆண்டு விழா நடைபெறுகிறது. முதல் வார நிகழ்ச்சி -19.3.2017, காலை 8.00 மணி அளவில் நடைபெறுகிறது. இடம்: அருள்மிகு ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் திருக்கோயில், வெள்ளாளத்தெரு, புரசைவாக்கம். மேலும், 26.3.2017 அன்றும் சென்னையிலிருந்து திருநாராயணபுரத்திற்கு சமர்ப்பிக்கும் திருக்குடைகள் திருவீதி ஊர்வல விழா நடைபெறும்.
தொடர்புக்கு: 98400 51231.
பன்னிரு திருமுறை இசைவிழா
அரனருள் தனது பதினான்காம் ஆண்டு பன்னிரு திருமுறை இசைவிழாவினை வரும் 12.3.2017 முதல் 23.3.17 வரை, காலை 10.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை சிறப்புற நிகழ்த்த உள்ளது. இடம்: தருமபுரம் ஆதீனம் சமயப் பிரசார நிலையம், 158, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை. 
தொடர்புக்கு:  044 2378 2333 / 94441 56335.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com