பிப். 2-ல் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் 85 ஆண்டுகளுக்கு பிறகு வரும் பிப்ரவரி 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 1932 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர், 85 ஆண்டுகளுக்கு பிறகு வரும் பிப்ரவரி 2-ல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, கோயிலில் ஞாயிற்றுகிழமை மாலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், அஷ்ட லட்சுமி ஹோமம் பஞ்சாட்சர ஹோமம், சம்கிதா ஹோமம், அஷ்த்திர ஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து திங்கள்கிழமை (டிச. 5) காலை 9.30 மணிக்கு மகா தீபாராதனை பாலாலயம் மற்றும் முகூர்த்த கால் நடும் நிகழ்வு நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இந்திய தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அனுமதியுடன் அன்னாபிஷேக விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com