இன்று முதல் 12-ஆம் தேதி வரை 24 மணி நேரமும் மலைப் பாதை திறப்பு

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சனிக்கிழமை (அக். 1) முதல் 12-ஆம் தேதி வரை மலைப் பாதையை 24 மணி நேரமும் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இன்று முதல் 12-ஆம் தேதி வரை 24 மணி நேரமும் மலைப் பாதை திறப்பு

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சனிக்கிழமை (அக். 1) முதல் 12-ஆம் தேதி வரை மலைப் பாதையை 24 மணி நேரமும் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை (அக். 3) தொடங்க உள்ளது.அதற்கான முன்னேற்பாடுகள் விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருமலையின் மாட வீதிகள், முக்கிய வளைவுகள், சந்திப்புகளில் வண்ண மின் விளக்கு அலங்காரங்கள், மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
பாபவிநாசம் செல்லும் மார்க்கத்தில் மலர் பூங்கா, வரலாற்று நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் சித்திரங்கள், சிலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக, போக்குவரத்துக் கழகம் சார்பில் 750 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சனிக்கிழமை (அக். 1) முதல் 12-ஆம் தேதி வரை முதல், இரண்டாம் மலைப் பாதைகள் இரண்டும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். கருடசேவையின்போது, வரும் 7, 8-ஆம் தேதிகளில் இரு சக்கர வாகனங்கள் மலைப் பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை மார்க்கங்களுக்கு செல்ல தேவஸ்தானம் சார்பில் இலவசப் பேருந்துகள் இயக்கப்படும்.
பிரம்மோற்சவ சமயத்தில் சுமார் 7 லட்சம் லட்டுகள் இருப்பில் வைக்கப்படும்.
திருமலையில், பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விழா தொடர்பாக, பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஆலோசனைகளை வழங்க 1800 425 111111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com