காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில்.....
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. 19 ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெற்றதால் நகரமே விழாக்கோலம் கண்டது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.

மீனாட்சிபுரத்தில் 1956 நவம்பர் 11(கார்த்திகை 2) அன்னை முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்தது. கர்ப்பக்கிரகத்தில் முத்துமாரியம்மன் நின்ற நிலையிலும் அதற்கு முன்னர் பீடம் அமைக்கப்பட்டு பீடத்தின் மீது அம்மன் சிரசும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயி லில் முதல் கும்பாபிஷேகம் 1978 ஆம் ஆண்டும், இரண்டாவது கும்பாபிஷேகம் 1997 ஆம் ஆண்டும் நடைபெற்றது. தற்போது 2016 இல் புதன்கிழமை(அக். 19) நடைபெற் றது 3-வது கும்பாபிஷேகமாகும்.

இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலில் லலிதா முத்துமாரி யம்மன் அறக்கட்டளை சார்பில் 2013 ஆம் ஆண்டில் பாலாயம் நடைபெற்று திருப்பணி கள் மேற்கொள்ளப்பட்டன. ரூ. 2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் நன்கொடையாளர் கள் நிதியில் ஐந்துநிலை ராஜகோபுரம், தங்கக்கொடிமரம், வெள்ளிக்கதவுகள், முன் மண்டபம், மகாமண்டபம்,அன்னதான மண்டபம் என திருப்பணிகள் நிறைவடைந்தது. 
 

கும்பாபிஷேகத்திற்கு பிரமாண்டமான யாகசாலைகள் அமைக்கப்பட்டு பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில், யாகசாலை பூஜைகள் நடைபெற்று நான்காம் கால யாக பூஜைகள் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு பூர்ணாகுதியுடன் நிறைவடைந்தது. காலை 9.15 மணிக்கு அன்னையின் சக்திவேலை பூஜாரி முன்னே எடுத்துச்செல்ல அதைத்தொடர்ந்து கடம்புறப்பாடு நடைபெற்றது. கழுகு வட்டமடித்ததும் காலை 10.15 மணியளவில் விமானம் மற்றும் ராஜகோபுரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவையொட்டி, திங்கள்கிழமை நடைபெற்ற யாகசாலை பூஜைகளில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற யாகசாலை பூஜை களில் சிவகங்கை எம்.பி பிஆர். செந்தில்நாதன், தமிழ்நாடு சட்டபேரவை காங்கிரஸ் தலைவர் கேஆர். ராமசாமி மற்றும் முக்கியபிரமுகர்கள் பங்கேற்றனர்.

புதன்கிழமை கும்பாபிஷேகவிழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம். சொக்கலிங்கம், மீனாட்சிபுரம் ஸ்ரீலலிதா முத்துமாரியம்மன் அறக்கட்டளை தலைவர் எம். அருணாசலம், செயலாளர் வீ. அய்யப்பன், பொருளாளர் பி. ராமசுப்பிரமணியன், கோயில் தக்கார் மற்றும் உதவிஆணையர் எம். ராமசாமி, ஆய்வாளர் முருகானந்தம், கோயில் செயல்அலுவலர் ஏ.கே. அகிலாண்டேஸ்வரர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி மூன்று தினங்களும் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு மூன்றுவேளைகளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

காரைக்குடி டி.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com