திருத்தணி, திருப்போரூர் முருகன் கோயில்களில் 31-இல் கந்த சஷ்டி தொடக்கம்

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா வரும் திங்கள்கிழமை(அக். 31) தொடங்குகிறது.
பொலிவுமிக்க திருப்போரூர் முருகன் கோயிலின் தோற்றம்.
பொலிவுமிக்க திருப்போரூர் முருகன் கோயிலின் தோற்றம்.

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா வரும் திங்கள்கிழமை(அக். 31) தொடங்குகிறது.
திருத்தணி முருகன் கோயிலில், ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா ஏழு நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு, கந்த சஷ்டி வரும் 31-ஆம் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி, அன்று காலை 10 மணிக்கு மூலவருக்கு புஷ்ப அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறுகிறது.
தொடர்ந்து, 1-ஆம் தேதி மூலவருக்கு பட்டு, 2-ஆம் தேதி தங்கக் கவசம், 3-ஆம் தேதி திருவாபரணம், 4-ஆம் தேதி வெள்ளிக் கவசம், 5-ஆம் தேதி சந்தனக் காப்பு உள்ளிட்ட அலங்காரங்களும், தீபாராதனையும் நடைபெறும்.
மேலும், அக். 31 முதல் நவ. 6 வரை லட்சார்ச்சனை நடைபெறும். நவம்பர் 5-ஆம் தேதி மாலை சண்முகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலியும், 6-ஆம் தேதி நண்பகலில் உற்சவருக்கு திருக்கல்யாணமும் நடைபெறும்.
திருப்போரூரில்...
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா வரும் 31-ஆம் தேதி தொடங்குகிறது.
முருகன், சூரபத்மனுடன் வானத்தில் நின்று போர் புரிந்த தலம் திருப்போரூர். இறைவன் பனைமரத்தில் சுயம்புவாக தோன்றிய சிறப்புமிக்கது இத்திருத்தலம். இங்கு எழுந்தருளியிருக்கும் கந்தபெருமானுக்கு கந்த சஷ்டி லட்சார்ச்சனை பெருவிழா வரும் 31-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது.
அன்று காலையில் கொடியேற்றம், மாலையில் கிளி வாகன உலா, 1-ஆம் தேதி ஆட்டுக்கிடா வாகன உலா, 2-ஆம் தேதி புருஷாமிருகம் வாகன உலா, 3-ஆம் தேதி பூதவாகன உலா, 4-ஆம் தேதி வெள்ளி அன்னவாகன உலா, 5-ஆம் தேதி மாலையில் சூரசம்ஹாரம், குதிரை வாகன உலா, இரவில் தங்க மயில் வாகன உலா, 6-ஆம் தேதி மாலையில் திருக்கல்யாணம், யானை வாகன உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கடைசி நாள் தவிர மற்ற நாள்களில் காலையில் பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் க.ரமணி, செயல் அலுவலர் கோ.எஸ்.நற்சோனை, சிவாச்சாரியார்கள், கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.


 சூரசம்ஹாரத்துக்காக சூரபத்மன் உள்ளிட்ட சிலைகளை உருவாக்கும் கலைஞர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com