சிவபெருமானின் மூன்றாவது கண் 

சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானது தனித்துவ அடையாளங்களில் நெற்றிக்கண்ணும் ஒன்றாகும். இதன் காரணமாக இவர் முக்கண்ணன் என்றும், நெற்றிக்கண்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.
சிவபெருமானின் மூன்றாவது கண் 

சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானது தனித்துவ அடையாளங்களில் நெற்றிக்கண்ணும் ஒன்றாகும். இதன் காரணமாக இவர் முக்கண்ணன் என்றும், நெற்றிக்கண்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.

இவர் தன்னுடைய நெற்றிக்கண்ணுக்கு புகழ்பெற்றவர். இவருடைய நெற்றிக்கண் மூலமாகத் தீப்பொறி வெளியே வந்து அனைத்தையும் பஸ்பமாக்கி விடும் என்பது ஐதீகம். இவர் கடும் கோபத்துக்கு ஆளாகும் போது, குற்றவாளியைத் தண்டிக்க தன்னுடைய நெற்றிக்கண்ணைத் திறப்பார் என்று நம்பப்படுகிறது.

அழிக்க உதவும் இந்த மூன்றாவது கண்ணை மனதில் வைத்துத் தான் பலரும் இவரை அழிக்கும் கடவுள் என்று கூறுகின்றனர். இவரின் நெற்றிக்கண் ஞானக் கண் என்றும் சில நேரம் குறிப்பிடப்படுகிறது.

வலது கண்ணும், இடது கண்ணும் இவ்வுலகத்தில் இவருடைய நடவடிக்கையைக் குறிக்கும் மூன்றாவது கண்ணே இவருடைய ஆன்மீக ஞானம் மற்றும் சக்தியை குறிக்கும். இவருடைய நெற்றிக்கண் மூலமாகத் தோற்ற நிலைக்கு அப்பாற்பட்டவைகளையும் பார்த்து, தீய சக்தியை அழிப்பார் என்று நம்பப்படுகிறது.

நெற்றிக்கண் வரலாறு:
சக்தி தேவியின் இறப்புக்குப் பின் அவரின் மறைவை எண்ணி இவர் மீளா துயரத்தில் மூழ்கினார். அதனால் ஒரு குகைக்கு சென்று ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அப்போது தான் சதி தேவி மீண்டும் பார்வதி தேவியாகப் பிறந்து, இவரைத் திருமணம் செய்யத் தயாரானார்.

ஆனால் கடவுள்கள் தீவிர முயற்சி செய்தும் கூட இவரின் தவத்தில் இருந்து இவரை எழுப்ப முடியவில்லை. அப்போது, இவரின் தவத்தை களைக்க காதல் கடவுளான காமாதேவி அனுப்பி வைக்கப்பட்டார். காமாதேவி இவரை அம்பு மூலமாகத் தாக்கிய போது, இவர் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து, காமாவை எரித்து சாம்பலாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com