மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் 2-ம் தேதி முதல் நவராத்திரி விழா தொடக்கம்

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நவராத்திரி விழா சென்னை...
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் 2-ம் தேதி முதல் நவராத்திரி விழா தொடக்கம்

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில்
2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி விழாவை முன்னிட்டு அனைத்து நாட்களும் மாலை 6.45 மணியளவில்
இசை கச்சேரிகளும், நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. 9-ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு மாலை 5 மணிக்குள் மாணவர்கள்  கோயிலில் 3 நாட்கள் வைத்து வழிபட பாடப்புத்தகங்களை அழகாக ஒருங்கிணைத்து கட்டி முகவரியோடு வழங்கினால் பூஜிக்கப்படும். 11-ம் தேதி சரஸ்வதி பூஜை முடிந்து மாணவர்களுக்கு பிரசாதங்களோடு பாடப்புத்தகங்கள் திரும்ப வழங்கப்படும்.

வித்யாரம்பரம் 11-ஆம் தேதி வித்யாரம் அட்சர அபியாசம் காலை 7.30 மணி முதல்
10.30 மணி வரை நடைபெறவுள்ளது. கோயில் நம்பூதிரிகள் குழந்தைகளின் நாவில் ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ என்று மோதிரத்தால் எழுதி, பெற்றோர்கள் கொண்டுவரும் எவர்சில்வர் தட்டில் அரிசியை கொட்டி, குழந்தையின் விரலை பற்றி எழுத்துக்களை எழுத பயிற்றுவிப்பார்கள்.

வித்யாரம்பத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும்,
குழந்தைகளுக்கு கரும்பலகை, எழுதுகோல்கள், எழுத்துக்கள் அடங்கிய அட்டைகளை கோயில் நிர்வாகத்தின் சார்பில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இதற்கு பெற்றோர்கள் முன்பதிவு செய்யலாம்.

மேலும் தகவல்களுக்கு 044-28171197,2197,5197 ஆகிய எண்களில் தொடர்புக்கொள்ளுமாறு கோயிலின் நிர்வாக அதிகாரி அனிஷ்குமார்
தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com