63 நாயன்மார்களுடன் வீதி உலா வந்த கபாலீஸ்வரர்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் வீதிஉலா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவின் 8-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த அறுபத்து மூவர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவின் 8-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த அறுபத்து மூவர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் வீதிஉலா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. 63 நாயன்மார்களுடன் வீதிஉலா வந்த கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரரை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
சைவத் தலங்களில் முக்கிய தலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 7ஆவது நாளான சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இதில் மற்றொரு முக்கிய விழாவான அறுபத்து மூவர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிற்பகல் 3.45 மணிக்கு தொடங்கி கோலவிழி அம்மன், விநாயகர் உற்சவர்களைத் தொடர்ந்து, அறுபத்து மூவர் வீதியில் வலம் வந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து வெள்ளித் தேரில் எழுந்தருளி கபாலீஸ்வரர் காட்சியளித்தார். தொடர்ந்து 63 நாயன்மார்களுடன் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகியோர் நான்கு மாடவீதிகளையும் வலம் வந்தனர்.
பதினாறுகால் மண்டபத்தை இரவு 9.40 மணிக்கு அடைந்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
பக்தர்களுக்கு அன்னதானம்: அறுபத்து மூவர் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் தனியார் நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்பட்டது.
பலத்த பாதுகாப்பு: விழாவுக்கு, போலீஸ் துணை ஆணையர் பாலகிருஷ்ணண் தலைமையில் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 25-க்கும் மேலான இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் மூலமும், கண்காணிப்பு கோபுரம் அமைத்தும் போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர்.
செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம்: ஞாயிற்றுக்கிழமை இரவு சந்திரசேகரர் பார்வேட்டை விழா, ஐந்திருமேனிகள் விழா நடைபெற்றது. திங்கள்கிழமை இரவு இறைவன் இரவலர் கோல விழாவும், வரும் செவ்வாய்கிழமை அன்று திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com