திருமலை தேவஸ்தானம் சார்பில் புதிய செயலி விரைவில் வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆர்ஜித சேவா டிக்கெட் வழங்க 'திவ்யானுக்கிரகம்' என்ற பெயரில் புதிய செயலி விரைவில் வெளியிட உள்ளது.
திருமலை தேவஸ்தானம் சார்பில் புதிய செயலி விரைவில் வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆர்ஜித சேவா டிக்கெட் வழங்க 'திவ்யானுக்கிரகம்' என்ற பெயரில் புதிய செயலி விரைவில் வெளியிட உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் விஜயா வங்கியின் உதவியுடன் 86 இ-தர்ஷன் கவுன்ட்டர்களை அமைத்துள்ளது. ஆனால் அதில் 50 கவுன்ட்டர்களில் தினசரி 2 அல்லது 3 பக்தர்கள் வந்து ஏழுமலையான் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.
அதில் 27 கவுன்ட்டர்கள் தேவஸ்தான வளாகத்துக்குள் உள்ளதால் தேவஸ்தானமே அதை நிர்வகித்து வருகிறது. மற்ற 23 கவுன்ட்டர்களை விஜயா வங்கி உதவியுடன் நடத்தி வருகிறது. இங்கு வாடகை அறை முன்பதிவு, ரூ. 300 விரைவு தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளை பக்தர்கள் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் தேவஸ்தானம் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை இணையதளம் மூலம் வெளியிட்டு வருகிறது. இதனை முன்பதிவு செய்யும் பக்தர்கள் சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஆர்ஜித சேவையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து பக்தர்கள் சேவா தேதிக்கு முன்பாக தேவஸ்தானத்துக்கு தெரிவித்தால், அந்த டிக்கெட்டுகளை தேவஸ்தானம் மற்ற பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் வழங்கி வருகிறது.
இதுகுறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு இல்லாத நிலையில், இந்த சேவா டிக்கெட்டுகளை எளிதில் பக்தர்களுக்கு அளிக்க தேவஸ்தானம் 'திவ்யானுக்கிரகம்' என்ற புதிய செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com