திரௌபதி அம்மன் கோயிலில் வசந்த மகோற்சவம் தொடக்கம்

திருத்தணி பழைய தர்மராஜா கோயில் தெருவில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த மகோற்சவம் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருத்தணியில் வியாழக்கிழமை வீதியுலா வந்த திரௌபதி அம்மன்.
திருத்தணியில் வியாழக்கிழமை வீதியுலா வந்த திரௌபதி அம்மன்.

திருத்தணி பழைய தர்மராஜா கோயில் தெருவில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த மகோற்சவம் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
20 நாள்கள் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு தினமும் மதியம் 1 மணி முதல் மாலை 5.30 மணி வரை காஞ்சிபுரம் சு.முத்துகணேசன் மகாபாரத விரிவுரையும், திருவண்ணாமலை மாவட்ட இசைக்குயில் எல். தேவராசன் கவி வாசித்தலுடன் மகாபாரத சொற்பொழிவும் நடைபெறுகிறது.
வரும் மே 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு தீ மிதித் திருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, திரௌபதி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், வீதியுலாவும் நடைபெறுகிறது.
வியாழக்கிழமை காலை 6 மணிக்கு திரௌபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மேட்டுத்தெரு, சன்னதி தெரு, ம.பொ.சி. சாலை, பழைய பஜார் தெரு, பெரியதெரு, உள்ளிட்ட முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுத்தலைவர் இ.ஆர். தர்ம பிரகாசம், நிர்வாகக் குழுவினர்கள் பி. பஞ்சாட்சரம், எஸ். சரவணன், வி.ரமேஷ், வி.கண்ணன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com