தங்கப் பல்லக்கில் ராமானுஜர் வீதியுலா

ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு அவதார திருவிழாவின் மூன்றாம் நாளான திங்கள்கிழமை ராமானுஜர் தங்கப் பல்லக்கில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தங்கப் பல்லக்கில் திருவீதியுலா வந்த உற்சவர் ராமானுஜர்.
தங்கப் பல்லக்கில் திருவீதியுலா வந்த உற்சவர் ராமானுஜர்.

ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு அவதார திருவிழாவின் மூன்றாம் நாளான திங்கள்கிழமை ராமானுஜர் தங்கப் பல்லக்கில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரசித்தி பெற்ற ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் சிறப்பாக நடைபெற்றது.
இதையடுத்து வைணவ மகா குரு ராமானுஜரின் 1000-ஆவது அவதார உற்சவம் 22-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அவதாரத் திருவிழாவின் மூன்றாவது நாளான திங்கள்கிழமை காலை ராமானுஜர் அலங்கரிக்கப்பட்ட தங்கப் பல்லக்கில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து ராமானுஜருக்கு பகலில் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரை வழிபட்டனர்.
மணிமண்டபம் அமைக்கும் பணி தாமதம்: பக்தர்கள் அதிருப்தி
ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி விழாவை முன்னிட்டு, தமிழக சுற்றுலாத் துறை சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 3.36 கோடி மதிப்பீட்டில் ராமானுஜருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படாததால் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமானுஜர் தானுகந்த (உற்சவர்) திருமேனியாக அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில் ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் நிறைவடைந்து, தற்போது ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதை முன்னிட்டு தமிழக சுற்றுலாத் துறை சார்பில், ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 2.77 சென்ட் பரப்பளவு இடத்தில் ரூ. 3.36 கோடி மதிப்பீட்டில் ராமானுஜருக்கு மணிமண்டபம் கட்டுவது என ஏற்கெனவே முடிவு செய்து அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான வரை படம் தயாரிக்கும் பணி தமிழக இந்து அறநிலையத் துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்றது. இந்த வரைபடம் தயாரிப்பிலும், வரையப்பட்ட வரை படத்துக்கு ஒப்புதல் பெறுவதிலும் ஏற்பட்ட சிக்கலால் பல மாதங்களாக இப்பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் அதிருப்தியடைந்து உள்ளனர். எனவே மணிமண்டபம் அமைக்கும் பணியை சுற்றுலாத் துறையினர் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com