ராமானுஜர் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஐ.ஜி. ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் 1000-ஆவது ஆண்டு விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு அவதார திருவிழாவின் நான்காம் நாளான செவ்வாய்க்கிழமை, சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்த உற்சவர் ராமானுஜர்.

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வைணவ மகா குரு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு அவதார 10 நாள் உற்சவம் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவுக்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்ட மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.
பக்தர்களின் பாதுகாப்புக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் செவ்வாய்க்கிழமை
ஆதிகேசவ பெருமாள் கோயிலை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
அப்போது காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட டி.ஐ.ஜி. நஜ்மல் ஹோடா, காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி, ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சிலம்பரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com