ஸ்ரீராமானுஜருக்கு வெள்ளை சாத்துபடி உற்சவம்

திருமலையில் ஸ்ரீராமானுஜருக்கு வெள்ளை சாத்துபடி உற்சவம் நடைபெற்றது.
திருமலையில் வெள்ளை சாத்துபடி உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீராமானுஜர்.
திருமலையில் வெள்ளை சாத்துபடி உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீராமானுஜர்.

திருமலையில் ஸ்ரீராமானுஜருக்கு வெள்ளை சாத்துபடி உற்சவம் நடைபெற்றது.
வைணவ மகா குரு ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்தி நிறைவு விழாவை முன்னிட்டு திருமலையில் கடந்த சில நாள்களாக பாஷ்யகாரர் உற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் 6-ஆவது நாளான
வியாழக்கிழமை வெள்ளை சாத்துபடி உற்சவம் நடைபெற்றது. இதில் ஸ்ரீராமானுஜருக்கு வெள்ளை வேட்டி அணிவித்து, அர்ச்சகர்கள் மாடவீதியில் வலம் வர செய்தனர். இதில் தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயர்கள் கலந்து கொண்டனர்.
சாதாரணமாக ஸ்ரீராமானுஜருக்கு காவி வேட்டி மட்டுமே அணிவிப்பது வழக்கம். ஆனால் வெள்ளை வேட்டி அணிவிப்பதற்கு ஒரு சிறப்பு காரணம் உண்டு. ஸ்ரீராமானுஜர் வெள்ளை வேட்டி அணிந்து
கொண்டு அவரின் சீடரான கூரத்தாழ்வாரின் உதவியுடன் ஸ்ரீரங்கத்திலிருந்து, கர்நாடக மாநிலம் மேல்கோட்டைக்கு இந்த நாளில் சென்றதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் அங்கு 14 ஆண்டுகள் வாழ்ந்தார். இதை நினைவுகூரும் வகையில் திருமலையில் வியாழக்கிழமை வெள்ளை சாத்துபடி உற்சவம் நடைபெற்றது.

*ஸ்ரீராமானுஜர் வெள்ளை வேட்டி அணிந்து கொண்டு அவரின் சீடரான கூரத்தாழ்வாரின் உதவியுடன் ஸ்ரீரங்கத்திலிருந்து, கர்நாடக மாநிலம் மேல்கோட்டைக்கு இந்த நாளில் சென்றதாக புராணங்களில்
குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் அங்கு 14 ஆண்டுகள் வாழ்ந்தார். இதை நினைவுகூரும் வகையில் திருமலையில் வியாழக்கிழமை வெள்ளை சாத்துபடி உற்சவம் நடைபெற்றது.*

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com