சிம்மாசலம் அப்பண்ணாவிற்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்

ஆந்திர மாநிலம், சிம்மாசலத்தில் உள்ள அப்பண்ணாவிற்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சனிக்கிழமை பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
சிம்மாசலத்தில் உள்ள அப்பண்ணாவிற்கு பட்டு வஸ்திரம் கொண்டு சென்ற திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ், செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு தம்பதியினர்.

சிம்மாசலத்தில் உள்ள வராக சுவாமி (அப்பண்ணா) தனிச் சிறப்பு வாய்ந்த கல்லால் செதுக்கப்பட்டதால், அவரை ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிட்டு மூடி, கோயில் நிர்வாகம் பாதுகாத்து வருகிறது.
இந்நிலையில், அட்சய திருதியை நாளான சனிக்கிழமை காலை வராக சுவாமிக்கு அணிவித்திருந்த சந்தனக் காப்பு களையப்பட்டு, அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், புதிய சந்தனக் காப்பு அணிவிக்கப்பட்டது. இதையொட்டி, காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை வராக சுவாமியை சந்தனக் காப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசித்தனர்.
இந்த நாளில், வராக சுவாமிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பது வழக்கம். அதன்படி, சனிக்கிழமை தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ், தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு ஆகிய இருவரும் தம்பதி சமேதராக சிம்மாசலம் சென்று அப்பண்ணாவிற்கு பட்டு வஸ்திரத்தை சமர்ப்பித்தனர்.
அதனை கோயில் நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டு, அபிஷேகத்துக்குப் பின்னர் வராக சுவாமிக்கு அணிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com