ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா: பாதுகாப்புப் பணியில் 600 போலீஸார்

ஸ்ரீராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் 600 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீராமானுஜரின் 1000-ஆவது திருஅவதார விழாவின் 8-ஆம் நாளான சனிக்கிழமை சேஷ வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த உற்சவர் ராமானுஜர்.
ஸ்ரீராமானுஜரின் 1000-ஆவது திருஅவதார விழாவின் 8-ஆம் நாளான சனிக்கிழமை சேஷ வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த உற்சவர் ராமானுஜர்.

ஸ்ரீராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் 600 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் வைணவ மகாகுரு ஸ்ரீராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு அவதார உற்சவம் கடந்த 22-ஆம் தேதி முதல் தொடங்கி, நடைபெற்று வருகிறது.
விழாவின் ஒருபகுதியாக ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதில், தமிழகம், பிற மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கவும் காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டங்களில் பணியாற்றும் சுமார் 600 போலீஸார் 8 மணி நேர சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மே 1 (திங்கள்கிழமை வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு அவதாரத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என பேரூராட்சி சார்பில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேரோட்டத்தின்போது, ஏராளமானோர் பக்தர்களுக்கு நீராகாரங்கள் மற்றும் அன்னதானம் வழங்குவது வழக்கம். அன்னதானம் வழங்குவோர் பாக்கு மட்டைகளில் செய்யப்பட்ட தட்டுகள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட தொன்னைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மோர், குளிர்பானங்கள் வழங்க சில்வர் டம்ளர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள், டம்ளர்கள், தெர்மாகோல் தட்டுகள், கப்புகள், பேப்பர் கப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது எனவும், அன்னதானம் பெறும் பக்தர்கள் தட்டுகள் மற்றும் கப்புகளை குப்பை தொட்டியில் மட்டுமே போட வேண்டும். மேலும் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களைத் தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சார்பில் கடந்த சில தினங்களாக ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வுப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com