திருத்தணி ஆடிக்கிருத்திகை: 3 நாள் தெப்பத் திருவிழாவுடன் நிறைவு

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இதையொட்டி, காசி சுவாமிகள், சிவகோடி சுவாமிகள் முன்னிலையில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு
திருத்தணி ஆடிக்கிருத்திகை: 3 நாள் தெப்பத் திருவிழாவுடன் நிறைவு

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இதையொட்டி, காசி சுவாமிகள், சிவகோடி சுவாமிகள் முன்னிலையில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிக்கிருத்திகையையொட்டி, சரவணப்பொய்கையில் கடந்த 3 நாள்களாக தெப்பத்திருவிழா நடைபெற்றது.
நிறைவு நாளான வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு சரவணப்பொய்கை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கொளத்தூர் பி.எம்.ரவி தலைமை வகித்தார். ஜெங்காலப்பள்ளி ஹரீஷ், வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கார்த்திக் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காசி சுவாமி (எ) முருகானந்த சுவாமி, சிவகோடி சுவாமிகள் ஆகியோர் பங்கேற்று அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.
இதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணி அளவில் 3-ஆம் நாள் தெப்பத்திருவிழாவுடன் ஆடிக்கிருத்திகை விழா நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியில் சங்கர், துளசிராமன், மோகனகுமார், லோகநாதன் ஆகியோர் அன்னதான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com