ஸ்ரீசைலம் கோயில் சந்நிதியில் ரூ.1 கோடியில் தங்கத் தகடுகள் அமைப்பு

ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் உள்ள பிரம்மராம்பிகா சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோயில் சந்நிதி வாயிலில் ஒரு கோடி ரூபாய் செலவில் தங்கத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி சந்நிதி வாயிலில் பொருத்தப்பட்டுள்ள தங்கத் தகடுகள். (வலது) பிரம்மராம்பிகா அம்மன் சந்நிதி வாயிலில் பொருத்தப்பட்டுள்ள தங்கத் தகடுகள்.
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி சந்நிதி வாயிலில் பொருத்தப்பட்டுள்ள தங்கத் தகடுகள். (வலது) பிரம்மராம்பிகா அம்மன் சந்நிதி வாயிலில் பொருத்தப்பட்டுள்ள தங்கத் தகடுகள்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் உள்ள பிரம்மராம்பிகா சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோயில் சந்நிதி வாயிலில் ஒரு கோடி ரூபாய் செலவில் தங்கத்
தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், ஸ்ரீசைலத்தில் உள்ள பிரம்மராம்பிகா சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோயில் சைவத் தலங்களில் புகழ்பெற்றதாகும். இக்கோயிலுக்கு, உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் வருகின்றனர்.
இந்நிலையில், இக்கோயிலின் சந்நிதி வாயிலில் ஒரு கோடி ரூபாய் செலவில் தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான செலவு முழுவதையும், பெயர் சொல்ல விரும்பாத பக்தர் ஒருவர் ஏற்றுக் கொண்டுள்ளார். தங்க தகடுகள் பொருத்தப்பட்ட வாயில் வழியாக வெள்ளிக்கிழமை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மத்திய அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு:
பிரம்மராம்பிகா சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு பிரசாத் திட்டத்தின் கீழ், ரூ. 50 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதில், தலைமை கோயிலின் வளர்ச்சிக்கு ரூ.16.50 கோடி, மலைப்பாதையை விரிவுபடுத்தி, அதில் சென்ட்ரல் லைட்டிங் அமைக்க ரூ.13.61 கோடி, இரண்டு இடங்களில் வாகனம் நிறுத்தம் ஏற்படுத்த
ரூ. 2.72 கோடி, கோயில் கோபுரங்களை செப்பனிட ரூ.4.28 கோடி என செலவிடப்பட உள்ளது.
மீதமுள்ள தொகையில் பாதாள கங்கைக்கு செல்லும் ரோப் வேயை விரிவுபடுத்துவது, ஹடகேஸ்வரம் வளர்ச்சிப் பணிகள், மின் விளக்கு ஏற்பாடு, நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட விசாரணை மையம், ஒளி}ஒலி கண்காட்சி உள்ளிட்டவற்றையும் ஏற்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com