மேல்மலையனூர் கோயிலில் மயானக் கொள்ளை விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் சனிக்கிழமை மயானக் கொள்ளை விழா நடைபெற்றது.
மயானத்தை நோக்கி ஊர்வலமாக வந்த அங்காளம்மன்.
மயானத்தை நோக்கி ஊர்வலமாக வந்த அங்காளம்மன்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் சனிக்கிழமை மயானக் கொள்ளை விழா நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் மாசிப் பெருவிழா, மகா சிவராத்திரி தினமான வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று காலை முதல் மாலை வரை சிறப்பு அலங்காரம், சிறப்புப் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருந்தன. மயானக் கொள்ளை விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. காலை 11 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மன் மண்டை ஓடு மாலையுடன் நீண்ட சடை முடியோடு, மயானத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றார். அப்போது அம்மன் மீது கொழுக்கட்டை, சுண்டல், காய்கறிகள், தானியங்களை பக்தர்கள் எறிந்தனர்.
இதனை, பக்தர்கள் ஆர்வமுடன் எடுத்துச் சென்றனர். பின்னர், அம்மன் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று கோயிலை வந்தடைந்தார்.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அ.இரா.பிரகாஷ், அறங்காவலர் ஏழுமலை பூசாரி உள்ளிட்ட அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com