மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தீபாராதனை.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தீபாராதனை.

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதில் தமிழகம் மட்டுமன்றி, கேரளத்திலிருந்தும் பெண்கள் இருமுடி சுமந்து வந்து அம்மனை தரிசனம் செய்வர்.
நிகழாண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர், கோயில் மூலஸ்தானத்திலிருந்து திருக்கொடி மேள, தாளங்கள் முழங்க கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கோயில் கொடிமரத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. கொடியை இடைக்கோடு தந்திரி மகாதேவ அய்யர் ஏற்றி வைத்தார்.
விழாவில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அ.விஜயகுமார் எம்.பி., பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கோயில் மேலாளர் ஆறுமுகதரன், உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடற்கரைப் பகுதியிலும், கோயில் வளாகத்திலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மராஜன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com