திருமலையில் தங்க ரதத்தில் மலையப்பர் பவனி

வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருமலையில் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி ஞாயிற்றுக்கிழமை பவனி வந்து அருள்பாலித்தார்.
தங்க ரதத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி.
தங்க ரதத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி.

வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருமலையில் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி ஞாயிற்றுக்கிழமை பவனி வந்து அருள்பாலித்தார்.
திருமலையில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையானை தரிசிக்க ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதையடுத்து, சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக, விஐபி பிரேக், ஆர்ஜித சேவை உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்தது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.05 மணிக்கு வைகுந்த வாயில் திறக்கப்பட்டு முதலில் புரோட்டோகால் விஐபி தரிசனம் நடைபெற்றது.
அதன்பின்னர், அதிகாலை 4.09 மணி முதல் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். துவாதசியன்று (திங்கள்கிழமை) நள்ளிரவு வரை தேவஸ்தானம் அனைத்து தரிசனங்களையும் ரத்து செய்து, தர்ம தரிசனத்தை மட்டுமே தொடர முடிவு செய்துள்ளது.
தங்க ரதம் புறப்பாடு
திருமலையில் வைகுண்ட ஏகாதசியின் போது தங்க ரத புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம் வந்தார். இதனை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதைக் காண லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
அதனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
திருமலையில் தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் உணவு, குடிநீர், பால், டீ, காபி உள்ளிட்டவற்றை 24 மணி நேரமும் வழங்கியது. மேலும் நாராயணகிரி தோட்டத்தில் தேவஸ்தானம் ஏற்படுத்திய 16 தாற்காலிக காத்திருப்பு அறைகளில் 15 ஆயிரம் பக்தர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com