பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா

வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா

வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

காஞ்சிபுரம் அஷ்டபுஜம் பெருமாள் கோயிலில், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத தீப ஆராதனை நடைபெற்றன. பின்னர் காலை 5 மணிக்கு சொர்க்க வாசல் நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு பெருமாள் காட்சியளித்தார்.

வைகுண்ட பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு கருட சேவையில் பெருமாள் ராஜ வீதிகளில் திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயில், பச்சைவண்ண பெருமாள் கோயில், பவளவண்ண பெருமாள் கோயில், உலகளந்தார் கோயில், பாண்டவர் சமேத பெருமாள் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில் உள்பட 13 திவ்ய தேசங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டில்...
செங்கல்பட்டு, ஜன. 8: செங்கல்பட்டு கோதண்ட ராமர் கோயில், அண்ணா சாலை தேசிகர் கோயில், சிங்கப் பெருமாள் கோயில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில், திருவடிசூலம் வாரு வெங்கடேசப் பெருமாள் கோயில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. இதையடுத்து கருட வாகனத்தில் பெருமாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுராந்தகத்தில்...
மதுராந்தகம், ஜன. 9: மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

உத்தரமேரூரில்...
உத்தரமேரூர், ஜன. 8: உத்தரமேரூரில் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள் திருவடி பாத சேவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விஸ்வரூப தரிசனத்தில் சுந்தரவரதராஜப் பெருமாளின் திருவடி பாத சேவையை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். காலை 7 மணிக்கு உற்சவர் கருட வாகனத்தில் திருவீதி உலா வந்தார். இந்தக் கோயிலில் வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டும்தான் பெருமாளுக்கு நடைபெறும் திருவடிபாத சேவையை காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோயில் அருகே உள்ள ராமர் திருப்பாதம் பட்ட கல்லை இந்து முன்னணியினர் வழிபட்டனர். மாநிலப் பொதுச் செயலாளர் சி.பரமேஸ்வரன், ஒன்றிய அமைப்பாளர் என்.பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com