திருமலையில் தீர்த்தவாரி

திருமலையில் துவாதசியை ஒட்டி, திங்கள்கிழமை மாலை தீர்த்தவாரி நடைபெற்றது.
திருக்குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில் பங்கேற்றோர்.
திருக்குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில் பங்கேற்றோர்.

திருமலையில் துவாதசியை ஒட்டி, திங்கள்கிழமை மாலை தீர்த்தவாரி நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாளான வைகுண்ட துவாதசியையொட்டி, திருமலையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, திங்கள்கிழமை வைகுண்ட துவாதசியையொட்டி காலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாரை திருக்குளக்கரையில் எழுந்
தருளச் செய்து, அவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
பின்னர் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர்.
இதில், திருமலை மடத்தின் ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். திங்கள்கிழமை நள்ளிரவு சொர்க்கவாசல் நடை சாத்தப்பட்டு, செவ்வாய்க்
கிழமை முதல் வழக்கமான கைங்கரியங்கள் தொடங்கும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com