மாத்தம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

பெரியபாளையம் அருகே மேல் செம்பேடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமாத்தம்மன் கோயிலில் 5- ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மேல்செம்பேடு மாத்தம்மன் ஆலயத்தில் தீமிதித்த பெண்கள்.
மேல்செம்பேடு மாத்தம்மன் ஆலயத்தில் தீமிதித்த பெண்கள்.

பெரியபாளையம் அருகே மேல் செம்பேடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமாத்தம்மன் கோயிலில் 5- ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை மாத்தம்மனுக்கு புத்தாணி வைத்தல், மயில் கோலம் காணுதல், மாத்தம்மன் கதை சொல்லுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
சனிக்கிழமை அம்மன் ஊர்வலம், எதிர்கும்பம் போடுதல், பரசுராமன் போத்துராஜா கோலம் போடுதல், கோலம் கலைத்தல், தவசு மரம் ஏறுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு பக்தர்கள் கூழ் ஊற்றுதல், பொங்கல் வைத்தல், கவுரம்மா திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையடுத்து, காப்பு கட்டிய பக்தர்கள் 150 பேர் வரிசையாக வந்து தீமிதித்தனர்.
இதனை தொடர்ந்து உற்சவர் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கே.ரமேஷ், ஜி.பங்காரு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com