நூதன துவஜஸ்தம்பம் (கொடிமரம்) பிரதிஷ்டை கும்பாபிஷேகம்

சென்னை விருகம்பாக்கம் நடேச நகரில் உள்ள சிவ விஷ்ணு ஆலயத்தில் நூதன கொடிமர பிரதிஷ்டை
நூதன துவஜஸ்தம்பம் (கொடிமரம்) பிரதிஷ்டை கும்பாபிஷேகம்

சென்னை விருகம்பாக்கம் நடேச நகரில் உள்ள சிவ விஷ்ணு ஆலயத்தில் நூதன கொடிமர பிரதிஷ்டை கும்பாபிஷேகம் ஜூலை 6-ம் தேதி வியாழன் அன்று காலை 8.30 மணியளவில் நடைபெறுகின்றது. இத்தருணத்தில் ஒரு ஆலயத்திற்கு கொடிமரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

ஆலயத்தின் உயிர்நாடி கொடிக்கம்பம். அதாவது ஒரு மனிதனுக்கு முதுகு தண்டுபோல இன்றியமையாததாக கொடிமரம் விளங்குகிறது. ஆண்டுத் திருவிழாவின் (பிரம்மோற்சவம்) போது கொடி ஏற்றப்படுகிறது. கொடியேற்றப் பயன்படும் தர்ப்பைக் கயிறு இறைவனுடைய சக்தியை உச்சத்திற்கு கொண்டு வருவதாக ஆகமங்கள் கூறுகின்றன. கொடிமரத்தின் உச்சியில் உள்ள மணிகள் தீயசக்திகளை விரட்டும். கொடிமரத்தின் சிறப்பைப் பற்றி உமாபதி சிவம் என்ற அருளாளர் இயற்றியுள்ள பாடல்!

‘அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்

பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்து – நெஞ்சழுத்திப்

பேசு மெழுத்துடனே பேசாவெழுத்தினையுங்

கூசாமற் காட்டக்கொடி’

இத்தகைய சக்தி வாய்ந்த துவஜஸ்தம்பம் 24 அடி உயரத்தில் பலிபீடத்துடனும் மூஞ்சுறு வாகனத்துடன் இவ்வாலயத்தில் பிரதிஷ்டையாகி உள்ளது சிறப்பு. பூர்வாங்க யாகசாலை பூஜைகள் இன்று (ஜூலை 5) தொடங்கியது.

பக்த கோடிகள் இவ்வைபவத்தில் பங்கேற்று இகபர சுகம் அடைய வேண்டும் என விழா ஏற்பாட்டினை செய்த ஸ்ரீ பிரசன்ன வினாயகர் பக்த ஜன சபா கேட்டுக் கொள்கின்றது.

– கி.ஸ்ரீதரன்

மேலும் தகவல்களுக்கு : B. மீனாட்சி சுந்தரம் (செயலாளர்) 98400 94246 /                 V. கோபாலகிருஷ்ணன் (துணை செயலாளர்) 9445671834

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com