வெக்காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையத்தில் உள்ள வெக்காளியம்மன் கோயிலின் 12-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 550 பக்தர்கள் தீ மிதித்து தங்களது
வெக்காளியம்மன் கோயில் திருவிழாவில் தீ மிதித்த பக்தர்கள்.
வெக்காளியம்மன் கோயில் திருவிழாவில் தீ மிதித்த பக்தர்கள்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையத்தில் உள்ள வெக்காளியம்மன் கோயிலின் 12-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 550 பக்தர்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இக்கோயிலில் தீ மிதி திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு தீமிதி திருவிழா, பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது.
பின்னர், கணபதி ஹோமம், நவசண்டியாக பூஜைகள், தெருக்கூத்து, கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை கோ பூஜை, பிரம்மசாரி பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து வெக்காளி அம்மனுக்கு மகா கலசாபிஷேகம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜைகள் நடைபெற்றன. பின்னர், காப்புக்கட்டி விரதம் இருந்த 550 பக்தர்கள் வரிசையாக தீக்குழியில் இறங்கி, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதையடுத்து சிம்ம வாகனத்தில் வெக்காளி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
இதில், பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், ஈகுவார்பாளையம் முன்னாள் ஊராட்சித் தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மேலும், கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com