திருப்பதி லட்டுப் பிரசாதத்துக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டுப் பிரசாதம், தலைமுடி விற்பனைக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில நிதி அமைச்சர் யனமல ராமகிருஷ்ணா
திருப்பதி லட்டுப் பிரசாதத்துக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டுப் பிரசாதம், தலைமுடி விற்பனைக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில நிதி அமைச்சர் யனமல ராமகிருஷ்ணா தெரிவித்தார்.
புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 17-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் லட்டுப் பிரசாதம், அன்னதானம், வாடகை அறை உள்ளிட்டவற்றுக்கு மானியம் வழங்கி வருகிறது.
இதன் அடிப்படையில் கடந்த 2003-ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட சேவை வரியிலிருந்து (வாட்) தேவஸ்தானத்துக்கு மத்திய அரசு விலக்கு அளித்தது.
ஆனால், தற்போது நாடு முழுவதும் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்த உள்ளது.
இந்த புதிய வரி மூலம் லட்டுப் பிரசாதம் தயாரித்தல், வாடகை அறை, பிரசாதம் தயாரிக்க கொள்முதல் செய்யப்படும் பொருள்கள், அன்னதானம் வழங்க தேவைப்படும் பலசரக்கு, காய்கறிகள், தலைமுடி விற்பனை என அனைத்துக்கும் வரி விதிக்கப்பட முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதனால் லட்டுப் பிரசாதம், வாடகை அறை உள்ளிட்டவற்றின் விலை உயரும் சூழ்நிலை ஏற்பட்டது.
திருமலை - திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தினேன்.
இதில், லட்டுப் பிரசாதம், தலைமுடி விற்பனை ஆகிய வற்றுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதியளித்துள்ளதாக யனமல ராமகிருஷ்ணா தெரிவித்தார்.
இதுகுறித்து தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி ரவியிடம் கேட்டபோது, லட்டுப் பிரசாதம் மற்றும் தலைமுடி விற்பனைக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது குறித்து மத்திய அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை கிடைக்கவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com