திருமலையில் திவ்ய தரிசனம்: ஜூலை 7 முதல் வாரம் 3 நாள் ரத்து

திருமலையில் நடைபாதை பக்தர்களுக்கு வழங்கும் திவ்ய தரிசனத்தினை ஜூலை 7-ஆம் தேதி முதல் வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருமலையில் திவ்ய தரிசனம்: ஜூலை 7 முதல் வாரம் 3 நாள் ரத்து

திருமலையில் நடைபாதை பக்தர்களுக்கு வழங்கும் திவ்ய தரிசனத்தினை ஜூலை 7-ஆம் தேதி முதல் வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து திருமலையில் தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு புதன்கிழமை கூறியதாவது:
திருமலையில் கோடை விடுமுறை முடிந்த பின்னரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் தரிசனத்திற்காக பக்தர்கள் பலமணி நேரம் காத்திருக்கின்றனர். இதுவரை நடைபாதை மார்க்கத்தில் 15 முதல் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தனர்.
அதனால் அவர்கள் காத்திருப்பு அறையில் அதிக நேரம் காத்திருக்காமல் விரைவாக ஏழுமலையானைத் தரிசனம் செய்ய திவ்யதரிசன திட்டத்தை தேவஸ்தானம் தொடங்கியது.
தற்போது நடைபாதை மார்க்கத்தில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியது.
அதனால் திவ்ய தரிசன பக்தர்களுக்காக ஒதுக்கிய 22 காத்திருப்பு அறைகளும் நிறைந்து அவர்கள் நாராயணகிரி தோட்டத்தில் ஏற்படுத்தியுள்ள தாற்காலிக தரிசன வரிசை வரை பல மணிநேரம் காத்திருக்கின்றனர்.
மேலும் தரிசன வரிசைகளை அதிகரிக்க முடியாததால் ஜூலை 7-ஆம் தேதி முதல் வாரம்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்களுக்கு திவ்ய தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. ஆனால் இதுவரை திவ்யதரிசன பக்தர்களுக்கு வழங்கும் இலவச லட்டு பிரசாதம் நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதனால் திவ்ய தரிசன பக்தர்களுக்கு வழங்கும் இலவச லட்டு வழக்கம் போல் வழங்கப்படும் என்றார்.
இலவச லட்டு: நிறுத்த ஆலோசனை
2014-ஆம் ஆண்டு முதல் திருமலைக்கு நடைபாதை மார்க்கத்தில் வரும் பக்தர்களுக்கு தலா ஒரு இலவச லட்டு வழங்கும் திட்டத்தை தேவஸ்தானம் செயல்படுத்தி வருகிறது. அப்போது 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே நடைபாதை மார்க்கத்தில் வந்ததால் தேவஸ்தானம் இந்த முடிவை மேற்கொண்டது.
ஆனால் தற்போது 50 ஆயிரம் பக்தர்கள் வரை வருவதால் அவர்களுக்கு தலா ஒரு லட்டு வழங்கினால் தேவஸ்தானத்திற்கு கூடுதலாக ரூ.11 லட்சம் செலவாகிறது.
மேலும் ஜூலை 1-முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட பின் பிரசாதத்திற்கு தேவையான மூல பொருள்கள் கொள்முதல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
எனவே நடைபாதை பக்தர்களுக்கான இலவச லட்டை நிறுத்துவது குறித்து தேவஸ்தானம் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com