சீனிவாசமங்காபுரத்தில் வருடாந்திர புஷ்ப யாகம்

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை மதியம் வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெற்றது.
கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்ற புஷ்ப யாகம்.
கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்ற புஷ்ப யாகம்.

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை மதியம் வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெற்றது.
விழாவையொட்டி, கோயிலில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியை மண்டபத்தில் எழுந்தருளச் செய்து பால், தயிர், தேன், பழரசங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
அதன்பின், மதியம் 2.30 மணி முதல் 5 மணி வரை புஷ்ப யாகம் நடைபெற்றது. பச்சை, மஞ்சள், சிகப்பு, ஊதா, ரோஜா, வெள்ளை நிறங்களால் ஆன சாமந்தி, தாமரை, அல்லி, ரோஜா, சம்பங்கி, மல்லிகை, கனகாம்பரம், அரளி, தாழம்பூ உள்ளிட்ட மலர்களாலும் மருவு, தவனம், கத்தரிபச்சை, துளசி, வில்வம் உள்ளிட்ட பத்திரங்களாலும் (இலை) உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது. விழாவில், ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மன் பங்கேற்றார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உண்டியல் காணிக்கை ரூ. 2.53 கோடி
திருப்பதி, மார்ச் 24: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 2.53 கோடி வசூலானது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின்னர், ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கைகளைச் செலுத்தி வருகின்றனர். அதன்படி, புதன்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ. 2.53 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
65,240 பக்தர்கள் தரிசனம்
ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 65,240 பேர் தரிசித்தனர். இவர்களில் 29,593 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தினர்.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, தர்ம தரிசன பக்தர்கள் 9 காத்திருப்பு அறைகளிலும், நடைபாதை
பக்தர்கள் 4 அறைகளிலும் தரிசனத்துக்காக காத்திருந்தனர். தர்ம தரிசனத்துக்குச் செல்ல 6 மணி நேரமும், நடைபாதை பக்தர்களுக்கு 5 மணி நேரமும் ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com