திருப்பதி தேவஸ்தானத்துக்கு கிடைத்த நன்கொடைகள்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்ட நன்கொடைகளின் விவரம்:
பஞ்சலோகத்தால் ஆன மணியை நன்கொடையாக வழங்கிய சீனிவாசலு ரெட்டி.
பஞ்சலோகத்தால் ஆன மணியை நன்கொடையாக வழங்கிய சீனிவாசலு ரெட்டி.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்ட நன்கொடைகளின் விவரம்:
ரூ. 17 லட்சம் நன்கொடை
திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அதன்படி, வியாழக்கிழமை ஏழுமலையானின் அன்ன தான அறக்கட்டளைக்கு ரூ. 5 லட்சமும், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ. 2 லட்சமும், கோ சம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சமும் என மொத்தம் ரூ. 17 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
தங்க ஆரம்
திருமலை திருக்குளக்கரையில் உள்ள வராக சுவாமிக்கு வியாழக்கிழமை பெயர் சொல்ல விரும்பாத பக்தர் 100 கிராம் எடையுள்ள ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க ஆரத்தை நன்கொடையாக வழங்கினார். இதை கோயில் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

பஞ்சலோக மணி
திருப்பதியைச் சேர்ந்த சீனிவாசலு ரெட்டி என்ற பக்தர், திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு ரூ. 10.50 லட்சம் மதிப்புள்ள பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட பெரிய மணியை நன்கொடையாக கோயில் இணை அதிகாரி வெங்கட்டயாவிடம் வியாழக்கிழமை வழங்கினார்.

நாகாபரணம், சூரியக் கத்திரி

நன்கொடையாக வழங்கப்பட்ட நாகபரணம், சூரியகத்திரியுடன் தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ்,
செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு.


திருப்பதியை அடுத்த சீனிவாசமங்கபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு வியாழக்கிழமை சென்னையைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத பக்தர் ரூ. 2 கோடி மதிப்புள்ள 3.75 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் செய்த 2 நாகாபரணம் மற்றும் சூரியக் கத்திரியை நன்கொடையாக வழங்கினார்.
இதை தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவராவ் மற்றும் செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ ஆகிய இருவரும் இணைந்து பெற்றுக் கொண்டனர். இதனை வெள்ளிக்கிழமை காலை புஷ்பயாகத்தின்போது மூலவர் சிலைக்கு அலங்கரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com